Home வணிகம்/தொழில் நுட்பம் மாஸ் பணியாளர்களை வேலைக்கு அமர்த்த ஏர்ஏசியா விருப்பம்!

மாஸ் பணியாளர்களை வேலைக்கு அமர்த்த ஏர்ஏசியா விருப்பம்!

629
0
SHARE
Ad

-கோலாலம்பூர், செப்டம்பர் 10 – மாஸ் நிறுவனத்தை மறுசீரமைப்பதற்காக 6,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக கசானா நேஷ்னல் நிறுவனம் அறிவித்துள்ளதால், அவர்களில் பலரை ஏர்ஏசியா நிறுவனம் தங்களது நிறுவனத்தில் பணியில் அமர்த்த முன்வந்துள்ளது.

இன்று ஃபில் அப் அண்ட் ஃபிளை ஃபிரி  என்ற நிகழ்வின் அறிமுக விழாவில் கலந்து கொண்ட ஏர்ஏசியா நிறுவனத்தின் தலைவர் டோனி ஃபெர்னாண்டஸ், மாஸ் பணியாளர்களை தங்களது நிறுவனத்தை பணியில் அமர்த்த இருக்கும் தகவலை வெளியிட்டார்.

“200 பணியாளர்களில் இருந்து தற்போது 15,000 பணியாளர்கள் வரை தற்போது அதிகரித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மாஸ் நிறுவனத்தில் இருந்து வந்தவர்கள்” என்று டோனி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

ஏர்ஏசியா நிறுவனத்தில் சுமார் 50 சதவிகிதம் பேர் முன்னாள் மாஸ் பணியாளர்கள் தான் என்பதையும் டோனி அறிவித்தார்.

எனினும், குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர்ஏசியாவில் இருந்து மாஸ் நிறுவனத்திற்கும் பல பணியாளர்கள் சென்றதாகவும், இது ஒரு ஆரோக்கியமான விசயம் தான் என்றும் டோனி தெரிவித்தார்.