Home அவசியம் படிக்க வேண்டியவை டிஎச்ஆர் ராகா கெட்டிமேளம் கல்யாணத்தில் பிரபல மலேசிய நட்சத்திரங்கள்!

டிஎச்ஆர் ராகா கெட்டிமேளம் கல்யாணத்தில் பிரபல மலேசிய நட்சத்திரங்கள்!

735
0
SHARE
Ad

செப்டம்பர் 11 – நாட்டின் பிரபல வானொலியான டிஎச்ஆர் ராகாவின் கெட்டிமேளம் கல்யாணம், தலைநகர் புக்கிட் ஜாலில் கார் நிறுத்த மைதானத்தில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் டிஎச்ஆர் கெட்டிமேளம் கல்யாணம் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று ஜோடிகளான சுகுமாறன் மற்றும் லோகேஸ்வரி, சரவணன் மற்றும் கவிதா, தேவன் மற்றும் நவனீதா ஆகியோருக்கு மணமக்களின் உறவினர்கள், மலேசிய நட்சத்திரங்கள் மற்றும் பொதுமக்கள் புடை சூழ மேள தாளங்களுடன் கோலாகலமாக கல்யாணம் நடத்தி வைக்கப்பட்டது.

இந்த விழாவில் டிஎச்ஆர் வானொலியைச் சேர்ந்த பிரபல அறிவிப்பாளர்களான ஆனந்தா, உதயா, மாறன், அகிலா, புன்னகைப்பூ கீதா, சுரேஷ், ரேவதி ஆகியோருடன் மலேசியாவின் முன்னணி திரைநட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களுக்கு ஆசி வழங்கினர்.

#TamilSchoolmychoice

IMG_3119

IMG_3135

IMG_3143

IMG_3280

IMG_3302

IMG_3296

IMG_3299

IMG_3138

IMG_3304

IMG_3286

செய்தி, படங்கள்: ஃபீனிக்ஸ்தாசன்