சென்னை, செப்டம்பர் 18 – பிரதமர் நரேந்திர மோடியின் 64-வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சீன பிரதமர் லீ கெகியாங் மற்றும் நோபாள பிரதமர் சுசில் கொய்லாரா ஜப்பான் பிரதமர் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த வாழ்த்து செய்தியில் நாட்டுக்கு மேலும் பணியாற்றுவதற்கு உரிய ஆரோக்கியத்தை தர எல்ல வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அதேபோல் திமுக தலைவர் கருணாநிதியும் பிரதமருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நீண்ட காலம் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.