Home அவசியம் படிக்க வேண்டியவை நஜிப் பிரதமராக தொடர்ந்தால் தே.மு. தோல்வியடையும் – மகாதீர் கருத்து

நஜிப் பிரதமராக தொடர்ந்தால் தே.மு. தோல்வியடையும் – மகாதீர் கருத்து

514
0
SHARE
Ad

NAJIB6

கோலாலம்பூர், செப்டம்பர் 18 – டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பிரதமராக இருந்தால் 14-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தோல்வியடையும் என கூறியுள்ளார் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட்.

அரசுசாரா மலாய் இயக்கத்துடன் பேசும் போது மகாதீர் மேற்கண்டவாறு தனது அச்சத்தை வெளியிட்டார். முகமட் ரிட்ஸுவான் அப்துல்லா மகாதீர் அவ்வாறு கூறியதை உறுதிப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

மலாய் வர்த்தகர்களை பிரதிநிதிக்கும் அரசு சாரா இயக்கமான இக்வாஸ்ஸின் தலைவரான முகமட் ரிட்ஸுவான் தனது குழு மகாதீருடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சு வார்த்தை நடத்தியதாகத் தெரிவித்தார். அப்போது மகாதீர், தேசிய முன்னணியின் எதிர்காலம் குறித்துப் பேசியதாக அவர் தெரிவித்தார்.

“மகாதீர் தான் கூறிய கருத்தில் மிக உறுதியுடன் காணப்பட்டார். நஜிப் தொடர்ந்து ஆண்டு வந்தால் 14-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தோல்வியடையும் என அவர் உறுதியாகத் தெரிவித்தார்” என்று ரிட்ஸுவான் மலேசியன் இன்ஸைடரிடம் தெரிவித்தார் என அச்செய்தியகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேற்கண்ட மகாதீருடனான சந்திப்பு புத்ராஜெயாவில் உள்ள பெர்டானா பவுன்டேஷ்ன் அலுவலகத்தில் நடைபெற்றது. நாட்டின் பொருளாதாரம் தேசிய முன்னணி எதிர்காலம் ஆகியன குறித்து அந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

நஜிப்பின் தலைமைத்துவம் குறித்து விவாதிக்கும் நோக்கத்தை நாங்கள் கொண்டிருக்கவில்லை. ஆனால், மகாதீரே இப்பிரச்சனை பற்றிப் பேசினார் என ரிட்ஸுவான்  குறிப்பிட்டார்.

கடந்த மாதம் நஜிப்பிற்கு வழங்கும் தனது ஆதரவை மீட்டுக் கொள்வதாக மகாதீர் அறிவித்தார். ஆனால் நஜிப் ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரவில்லை. மாதீர் மேலும் இதுபற்றிப் பேசும்போது தவறு தவறுதான்.

நாம் தவற்றைச் சுட்டிக் காட்ட வாண்டும். மதில் மேல் பூனையாக இருக்க முடியாது. அதுதான் முன்னோக்கிச் செல்ல வழி என்றார் மகாதீர் எனவும் ரிட்ஸுவான்  கூறினார்.