Home உலகம் இலங்கையில் துறைமுக நகரம் அமைக்கும் சீனா!

இலங்கையில் துறைமுக நகரம் அமைக்கும் சீனா!

638
0
SHARE
Ad

port-cityகொழும்பு, செப்டம்பர் 18 – இலங்கையின் நெருங்கிய நட்பு நாடாக திகழ்ந்து வரும் சீனா, அங்கு சுமார் 140 கோடி டாலர்கள் முதலீட்டில் துறைமுக நகரம் ஒன்றை அமைக்க இருக்கின்றது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட சீன அதிபர் ஜி ஜிங்பிங், இது தொடர்பான ஒப்பந்தம் ஒன்றை இலங்கை அரசுடன் மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, இலங்கையின் தலைநகர் கொழும்புவிற்கு மிக அருகில், கடல் பகுதியில் செயற்கையாக தீவு ஒன்று அமைக்கப்பட்டு அங்கு துறைமுக நகரம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “583 ஏக்கர் பரப்பளவில் சீனா அமைக்க இருக்கும் இந்த துறைமுகம் உலகம் முழுவதுமிருந்து 500 கோடி டாலர்களை வர்த்தகமாக ஈர்க்கக்கூடியது.

இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெற இருக்கின்றனர்” என்று கூறியுள்ளது. இதற்கு இடையில் இலங்கை அதிபர் ராஜபட்சேவுடனான சந்திப்பின் போது ஜி ஜிங்பிங் பாதுகாப்பு, கடல் கண்காணிப்பு ஆகியவற்றில் முழு ஒத்துழைப்பு அளிப்பதற்கான ஒப்பந்தங்களையும் மேற்கொண்டுள்ளார்.