‘ஐ’ பட முன்னோட்டம், பாடல்கள் பற்றி தான் ஃபேஸ்புக், ட்விட்டரில் ரசிகர்கள் பேசி வருகிறார்கள். இந்நிலையில் சூர்யாவின் வாட்ஸ்ஆப் படம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
காரணம் சூர்யா தனது ப்ரொபைல் படமாக ‘ஐ’ படத்தின் சுவரொட்டி படங்களை வைத்துள்ளாராம். சூர்யாவும், விக்ரமும் நெருங்கிய நண்பர்கள் என்பதை அனைவரும் அறிவர்.
எனவே தனது நண்பரின் படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் அவர் இதை செய்துள்ளார். ஐ பட சுவரொட்டியை மட்டும் சூர்யா பயன்படுத்தவில்லையாம். மேலும் ‘ஐ ‘படக்குழுவுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.