Home கலை உலகம் ஆஸ்கர் ரவிச்சந்திரனின் சொத்துக்களை முடக்கியது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி!

ஆஸ்கர் ரவிச்சந்திரனின் சொத்துக்களை முடக்கியது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி!

841
0
SHARE
Ad

aascar v. ravichandranசென்னை, மே 2 – ரூ.96.75 கோடி கடனை செலுத்தாததால் ஆஸ்கர் ரவிச்சந்திரனின் அலுவலகம், வீடு, திரையரங்குகள் ஆகியவற்றை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கையகப்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளராக வலம் வரும் ஆஸ்கர் ரவிச்சந்திரன், விக்ரம் நடித்த ‘அந்நியன்’, கமல்ஹாசன் நடித்த ‘தசாவதாரம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களை பிரம்மாண்ட பட்ஜெட்களில் தயாரித்தவர்.

இதனிடையே, விக்ரம் நடித்த ‘ஐ’ மற்றும் ஜெயம் ரவி நடிக்கும் ‘பூலோகம்’ என இரண்டு பெரிய பட்ஜெட் படங்களை ஒரே நேரத்தில் தயாரித்ததில் ஆஸ்கர்  ரவிச்சந்திரன் கடனில் சிக்கினார். இதற்காக இந்திய ஓவர்சீஸ் வங்கியில் கடன் வாங்கியுள்ளார் ரவிச்சந்திரன்.

#TamilSchoolmychoice

பல்வேறு கடன் பிரச்சனைகளைத் தாண்டிதான் ‘ஐ’ திரைப்படம் வெளியானது. இந்த நிலையில், ஆஸ்கர் ரவிச்சந்திரன் கடனை செலுத்தாததால் அவரது அலுவலகம், வீடு மற்றும் மூன்று திரையரங்குகள் ஆகியவற்றை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கையகப்படுத்தி இருக்கிறது.

இது குறித்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்டுள்ள விளம்பரத்தில், “ஏப்ரல் 28-ஆம் தேதி முதல் மூன்று சொத்துக்களை சுவாதீனப்படுத்தி இருக்கிறோம். சென்னை அசோக் நகரில் உள்ள அலுவலகம், மயிலாப்பூரில் உள்ள வீடு, வேலூரில் உள்ள திரையரங்கம் மற்றும் சேலத்தில் உள்ள சந்தோஷ், சப்னா மற்றும் சாந்தம் திரையரங்குகள் ஆகியவை இதில் அடக்கம்’ என்று கூறப்பட்டுள்ளது.

ஐஓபி வங்கியில் வாங்கிய சுமார் 84 கோடி ரூபாய் கடன் மற்றும் வட்டியுடன் சேர்த்து 97 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாததினால், சென்னை அசோக் நகரில் உள்ள ஆஸ்கார் ரவியின் அலுவலகம், அபிராமபுரத்தில் அவர் வசிக்கும் வீடு மற்றும் வேலூரில் உள்ள அவரது சந்தோஷ், சப்னா, சாந்தம் என மூன்று திரையரங்குகள் ஆகிய சொத்துகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வரும் ஆஸ்கர் ரவிச்சந்திரனின் சொத்துக்களை வங்கி கையகப்படுத்தி இருப்பது திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.