Home உலகம் தமிழக மீனவர்களை சுடுவோம் என்று கூறவில்லை – இலங்கை அமைச்சர் சுவாமிநாதன்!

தமிழக மீனவர்களை சுடுவோம் என்று கூறவில்லை – இலங்கை அமைச்சர் சுவாமிநாதன்!

591
0
SHARE
Ad

swamy nathanகொழும்பு, மே 2 – எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை சுடுவோம் என்று தாம் கூறவில்லை என’ காரைக்காலில் செய்தியாளர்களை சந்தித்த இலங்கை அமைச்சர் சுவாமிநாதன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இந்து சமய மறுவாழ்வுத்துறை அமைச்சர் சுவாமிநாதன் காரைக்காலுக்கு வருகை தந்துள்ளார். இதன் அருகே உள்ள திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு விமான நிலையத்தில் சுவாமிநாதன் அளித்த பேட்டியில்; “தமிழக மீனவர்களை பற்றி கூறியதை தவறாக திரித்து வெளியிட்டு விட்டதாக குறிப்பிட்டார். இதனை கண்டிப்பதாக அவர் தெரிவித்தார்”.

#TamilSchoolmychoice

“நாடுகளுக்கிடையே எல்லை தாண்டுவோரை சுடும் அதிகாரம் அனைத்து நாடுகளிலும் உள்ள சட்டம் என்று தாம் கூறியது தவறாக சித்தரிக்கப்பட்டதாக அமைச்சர் சுவாமிநாதன் விளக்கமளித்தார். இந்திய மக்களுக்கோ, தமிழக மீனவர்களுக்கோ இலங்கை அரசு எந்த வித இடையூறும் செய்யாது” என்றார்.