Home இந்தியா அடுத்த ஆண்டு மே மாதம் திமுக ஆட்சி மலரும் – மு.க.ஸ்டாலின் பேச்சு!

அடுத்த ஆண்டு மே மாதம் திமுக ஆட்சி மலரும் – மு.க.ஸ்டாலின் பேச்சு!

642
0
SHARE
Ad

stalinசென்னை, மே 2 – தொழிலாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு நேற்று சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மே தின பூங்காவில் உள்ள நினைவுச் சின்னத்தில், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தொழிலாளர்களுடன் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–  ‘’மே தினம் உழைப்பாளர் சமுதாயத்தின் பெருமைகளை சொல்லி உழைப்பின் புகழ்பாடும் உன்னத திருநாள். உழைக்கும் தொழிலாளர்களுக்கும் தி.மு.க.வுக்கும் எப்போதும் பற்று உண்டு”.

“தமிழ்நாட்டில் அண்ணா தலைமையிலான ஆட்சியின் போது மே 1–ஆம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. அது கலைஞர் ஆட்சியில் ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டது”.

#TamilSchoolmychoice

“தொழிலாளர் நலனுக்கு தனி அமைச்சகம், தொழிலாளர் நல நிதியை நிர்வகிக்க தொழிலாளர் நல வாரியம், ஒப்பந்த தொழிலாளர் நலனுக்கு தனி சட்டம் என எண்ணற்ற திட்டங்களை தொழிலாளர்களுக்கு கொண்டு வந்தவர் தி.மு.க. தலைவர் கலைஞர்தான்”.

“தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொழிலாளர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.  ஆனால் இன்று தொழிலாளர்களுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது? பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளதால் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்”.

stalin (1)“தமிழ்நாட்டில் இன்று என்ன ஆட்சி நடக்கிறது? யார் முதலமைச்சர் என்றே தெரியவில்லை. கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தொழிலாளர்களை ஏமாற்றி வாக்கு பெற்றனர். இன்று தொழிலாளர்கள் நிர்கதியாக உள்ளனர்”.

“பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் தொழில் முதலீட்டு மாநாடு நடத்த போகிறார்களாம். மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் பல தொழிலாளர்கள் உயிரிழப்பு, ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் உயிரிழப்பு, ஆந்திராவில் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொலை இப்படி பல கொடுமைகள் நடக்கிறது”.

“இதற்கெல்லாம் தீர்வு கிடைத்திட அடுத்த ஆண்டு மே மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். தி.மு.க. ஆட்சி மலரும். தொழிலாளர்கள் கவலைப்பட வேண்டாம். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி. அதற்காக தொழிலாளர்கள் சபதம் ஏற்க வேண்டும்’’ என்றார்.