Home கலை உலகம் ‘ஐ’ படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் விஜய்!

‘ஐ’ படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் விஜய்!

608
0
SHARE
Ad

vijay-vikram-2சென்னை, ஜனவரி 26 – விஜய், விக்ரம் இருவருமே மிகவும் நெருங்கிய நண்பர்கள் என அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் கப்பல் இசை வெளியீட்டு விழாவில் நான் ‘ஐ’ படத்தை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன் என்று கூறினார் விஜய்.

இதை தொடர்ந்து இப்படம் கடந்த பொங்கலுக்கு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. உலகம் முழுவதும் 150 கோடி ரூபாய் வசூல் செய்து வசூல் சாதனை படைத்தது.

இதை கொண்டாடும் விதத்தில் ‘ஐ’ குழுவினர் விருந்து ஒன்று ஏற்பாடு செய்திருந்தனர். இதில் நடிகர் விஜய்யும் கலந்து கொண்டு சிறப்பித்தார், மேலும் விக்ரமை தன் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

#TamilSchoolmychoice