Home கலை உலகம் “ஐ” – படத்தில் திருநங்கைகளை கொச்சைப் படுத்தும் காட்சிகளை நீக்கப் போராட்டம்!

“ஐ” – படத்தில் திருநங்கைகளை கொச்சைப் படுத்தும் காட்சிகளை நீக்கப் போராட்டம்!

806
0
SHARE
Ad

Upcoming-Telugu-Tamil-Movie-Chiyaan-Vikram-Movie-Name-AI-672x356சென்னை, ஜனவரி 19 – நீண்ட காலத் தயாரிப்பில், மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியான ஐ – படம், பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, முதல் சில நாட்கள் வசூலில் சாதனை படைத்திருந்தாலும், அதன் உள்ளடக்கம், தரம் ஆகிய அம்சங்களில் தொடர்ந்து பலத்த அதிருப்தியை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்தப் படத்தில் திருநங்கைகளை கொச்சைப் படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதற்கு திருநங்கைகள் எதிர்ப்பு  தெரிவித்து உள்ளனர். ‘ஐ’படத்தில் திருநங்கைகளுக்கு  எதிராக காட்சிகளை நீக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

படத்தின் திரைக்கதையின்படி, உடற்கட்டழகராக வரும் விக்ரம், சந்தர்ப்ப சூழ்நிலையால், விளம்பர மாடலாக மாறுகின்றார். அவரை நவீன மாடலாக மாற்றுவதற்கு வரும் திருநங்கை ஒருவர் விக்ரமின் உடற்கட்டழகைப் பார்த்து காதல் கொள்கின்றார்.

#TamilSchoolmychoice

ஆனால், விக்ரம் அவரைத் தவிர்ப்பதால், ஆத்திரம் அடையும் அந்த திருநங்கை விக்ரமிற்கு எதிராக களம் இறங்கும் வில்லன் கோஷ்டியோடு இணைந்து விக்ரமின் உடலை சிதைக்கும் மருந்தை செலுத்துவதற்கு துணை புரிகின்றார். இந்த கதாபாத்திரத்தில் ஓஜாஸ் ரஜனி என்பவர் நடித்துள்ளார்.

நிஜ வாழ்விலும் இவர் ஒரு புகழ்பெற்ற ஒப்பனைக் கலைஞராவார்.

ojas rajani - I actor

ஓஜாஸ் ரஜனி 

இது போன்ற காட்சிகள் திருநங்கைகளை கொச்சைப் படுத்துகின்றது என்ற கண்டனங்கள் எழுந்துள்ளன.

நுங்கம் பாக்கம் சாஸ்திரிபவன் வளாகத்தில்   மத்திய தணிக்கை துறை அலுவலகம் முன்பு திருநங்கைகள் குழுவினர் இன்று திரண்டனர். ஏறத்தாழ 15 பேர் கொண்ட அந்தக் குழுவினர் ‘ஐ’படத்துக்கு எதிராகவும்  திருநங்கைகளை இழிவு படுத்தும் காட்சிக்கு அனுமதி கொடுத்த  தணிக்கைத் துறையை கண்டித்தும் கோஷம் எழுப்பினார்கள்.

‘ஐ’படத்தில்   இடம் பெற்றுள்ள திருநங்கை களுக்கு எதிரான காட்சிகளை நீக்குவதுடன் இயக்குநர் ஷங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  இல்லை என்றால் இந்த படத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இதுபோன்ற படங்கள் இனிமேல் வெளிவராத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் திருநங்கைகளை இழிவு படுத்துவது  போன்று காட்சிகள் இடம் பெற்று இருந்தால் அந்த படத்தை திருநங்கைகளுக்கு திரையிட்டுக் காட்ட வேண்டும்,  தணிக்கை குழுவில் திருநங்கைகள்  இடம் பெற வழிவகை வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

பின்னர் இந்த திருநங்கைகள் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர்களை சந்தித்து மனு அளித்தனர்.

இதற்கிடையே மற்றொரு சம்பவத்தில் சென்னை காவல் துறை ஆணையர், அலுவலகத்தில் தோழி என்ற அமைப்பின் இயக்குனர் அரவாணி சுதா தலைமையில் 20 திருநங்கைகள் ஐ படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திரண்டனர்.