Home நாடு மாஜூ ஜெயா கூட்டுறவுக் கழக முன்னோடி (ஊடா) கோவிந்தன் காலமானார்

மாஜூ ஜெயா கூட்டுறவுக் கழக முன்னோடி (ஊடா) கோவிந்தன் காலமானார்

731
0
SHARE
Ad

condolences imageகோலாலம்பூர், ஜனவரி 19 – மாஜூ ஜெயா கூட்டுறவுக் கழகத்தில் நீண்ட கால ஈடுபாடு கொண்டிருந்த சமூக சேவையாளர் என்.கோவிந்தன் இன்று கோலாலம்பூரில் காலமானார்.

பல்வேறு இந்திய இயக்கங்களிலும் தீவிர ஈடுபாடு காட்டி வந்த கோவிந்தன் ஊடா (UDA) நிறுவனத்தில் கடந்த காலத்தில் பணியாற்றிய காரணத்தால், நண்பர்களால் ஊடா கோவிந்தன் என அழைக்கப்பட்டார்.

கோவிந்தன், மஇகா தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் கிளையின் முன்னாள் தலைவருமாவார்.

#TamilSchoolmychoice

மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றங்களின் முயற்சியில் உருவான மாஜூ ஜெயா கூட்டுறவுக் கழகத்தை அமைப்பதிலும், அதன் பின்னர் அதன் வளர்ச்சியிலும் கோவிந்தன் முக்கிய பங்காற்றினார்.

மாஜூ ஜெயா கூட்டுறவுக் கழகத்தின் இயக்குநராகவும், ஒரு கால கட்டத்தில் அதன் தலைவராகவும் கோவிந்தன் பணியாற்றியிருக்கின்றார்.

டாக்டர் இராம சுப்பையா உபகாரச் சம்பள வாரியத்தின் இயக்குநர்களில் ஒருவராகவும் கோவிந்தன் சேவையாற்றி வந்தார்.

அன்னாரின் இறுதிச் சடங்குகள் குறித்த விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.