Home அவசியம் படிக்க வேண்டியவை பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இனி அதே நாளில் அஸ்ட்ரோவிலும்!

பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இனி அதே நாளில் அஸ்ட்ரோவிலும்!

913
0
SHARE
Ad

கோலாலம்பூர், செப்டம்பர் 19 – அமெரிக்க தொலைக்காட்சிகளின் பிரபல நாடகங்களை அங்கு வெளியிடப்படும் அதே நேரப்படி மலேசியாவிலும் அஸ்ட்ரோ ரசிகர்கள்  கண்டுகளிக்கலாம்.

இந்த வசதியை தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க, அஸ்ட்ரோ நிறுவனம் பிரபல ஆங்கிலத் தொலைக்காட்சி நிறுவனங்களான எச்பிஓ, ஃபாக்ஸ், எஸ்பிஇ நெட்வொர்க்ஸ், என்பிசி யுனிவெர்சல்ஸ் மற்றும் ஏஇடிஎன் மற்றும் இன்னும் பல தொலைக்காட்சிகளுடன் இணைந்து நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளது.

இந்த வசதி மூலம் அஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் தினசரி அஸ்ட்ரோ நிகழ்ச்சிகளுடன், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் பிரபல நாடகங்களையும் ஒரு சில மணி நேர இடைவெளிகளில் கண்டு களிக்கலாம்.

#TamilSchoolmychoice

தற்போது தொடங்கி அக்டோபர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்கள் வரை அஸ்ட்ரோ, “Same Day as The Us” என்ற வாசகத்துடன், சுமார் 16-க்கும் மேற்பட்ட புதிய ஆங்கில நிகழ்ச்சிகளை, அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் வெளியிட்ட ஒரு சில மணி நேரங்களில் மலேசியாவிலும் பிரத்தியேகமாக வெளியிடவுள்ளது.

இந்த வசதியின் மூலம் அஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் தங்களது தொலைக்காட்சி அந்த நிகழ்ச்சிகளை உடனுக்குடன் கண்டுகளிப்பதோடு மட்டுமின்றி, அஸ்ட்ரோ பியாண்டு பிவிஆர் வசதியின் மூலம் அதை தங்களது தொலைக்காட்சியில் பதிவு செய்தும் வைத்துக்கொள்ளலாம்.

பத்திரிக்கையாளர் சந்திப்பு

அஸ்ட்ரோவின் இந்த புதிய முயற்சி குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு தலைநகர் பங்சாரில் நடைபெற்றது. இதில் அஸ்ட்ரோ நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கமளித்தனர்.

 

IMG_4625

(அஸ்ட்ரோ நிறுவனத்தைச் சேர்ந்த ஆக்னெஸ் ரோசாரியோ நிகழ்ச்சிகள் குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கமளிக்கிறார்)

IMG_4637

(சோனி பிக்ட்சர்ஸ் என்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த லிங் சி கான் நிகழ்ச்சிகள் குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கமளிக்கிறார்)

IMG_4642

(எச்பிஓ ஏசியா நிறுவனத்தைச் சேர்ந்த எரிக்கா நார்த் நிகழ்ச்சிகள் குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கமளிக்கிறார்)

IMG_4657

(என்பிசி யுனிவெர்சல் நிறுவனத்தைச் சேர்ந்த ரமேஷ் சேக்  நிகழ்ச்சிகள் குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கமளிக்கிறார்)

IMG_4665

(பத்திரியாளர்கள் கேள்விகளுக்கு தொலைக்காட்சி நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பதிலளிக்கின்றனர்)

செய்திகள்- படங்கள்: ஃபீனிக்ஸ்தாசன்