Home கலை உலகம் நான் எப்போதும் தமிழனை மறக்காத தமிழன்! கத்தி இசை விழாவில் விஜய்!

நான் எப்போதும் தமிழனை மறக்காத தமிழன்! கத்தி இசை விழாவில் விஜய்!

601
0
SHARE
Ad

kaththi - vijayசென்னை, செப்டம்பர் 19 – ‘துப்பாக்கி’ படத்தின் வெற்றிக்கூட்டணியான விஜய்-முருகதாஸ் மீண்டும் இணைந்துள்ள படம் கத்தி.சமந்தா நாயகியாக நடித்த இப்படத்தின் இசைவெளியீடு பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று கோலாகலமாக சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் அரங்கேறியது.

kaththi_al_live024ஆர்யா, சிபிராஜ், தரணி, பேரரசு, விக்ரமன், ஏ.எல் விஜய், எஸ்.ஏ. சந்திரசேகர் உட்பட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர். இவ்விழாவில் பேசிய இளையதளபதி விஜய், “நான் எப்போதும் தமிழனை மறக்காத தமிழன். ஒருபோதும் தமிழனுக்கு எதிரான ஒரு காரியத்தை செய்யமாட்டேன்”.

kaththi_al_live032நான் தியாகி என்று சொல்லமாட்டேன். ஆனால் துரோகி இல்லை என அதிரடியாக பேசியதோடு, இவ்விழாவின் நாயகன் அனிருத்தையும் பாராட்டினார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ள இப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது உறுதியாகியுள்ளது.