Home கலை உலகம் புலி படத்திற்குத் தடை விதிக்கக் கோரி வழக்கு: விஜய்க்கு வழக்குக் கடிதம்!

புலி படத்திற்குத் தடை விதிக்கக் கோரி வழக்கு: விஜய்க்கு வழக்குக் கடிதம்!

964
0
SHARE
Ad

puli1-600x300தஞ்சாவூர் – விஜய் நடித்த ‘கத்தி’ படக் கதைத் திருட்டுத் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால்,அடுத்து விஜய் நடித்து வெளி வரவிருக்கும் ‘புலி’ திரைப்படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் எனத் தஞ்சை முதன்மை நீதிமன்றத்தில் அன்புராஜசேகர் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள இளங்காடு என்னும் கிராமத்தைச் சேர்ந்த அன்புராஜசேகர் ‘தாகபூமி’ என்ற தன்னுடைய குறும்படத்தைத் திரைப்படமாக எடுத்து வெளியிட முடிவு செய்திருந்தார்.

இந்நிலையில் இயக்குநர் முருகதாஸ் தன்னுடைய தாகபூமி கதையைக் கத்தி என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து வெளியிட்டதாக இயக்குனர் முருகதாஸ், தயாரிப்பாளர்கள் கருணாகரன், சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ், நடிகர் விஜய் ஆகியோர் மீது தஞ்சை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி வழக்குத் தொடுத்தார்.

#TamilSchoolmychoice

தனது கதையைத் தழுவிப் படம் எடுத்து அவர்கள் கோடி கோடியாகச் சம்பாதித்திருப்பதால், தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருந்தார்.

மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தஞ்சாவூர் நீதிமன்றம் ஜனவரி 23-ஆம் தேதி விஜய் உட்பட மேற்கண்ட 5 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் அன்றைய தினம் அவர்களில் ஒருவர் கூட ஆஜராகவில்லை. இதனால் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், அன்புராஜசேகர் தஞ்சை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தன் வக்கீல் வடிவேல் மூலம் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில் “கத்தி பட விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே நடிகர் விஜய் நடித்து விரைவில் வெளிவரவுள்ள புலி திரைப்படத்திற்குத்  தடைவிதிக்க வேண்டும். மேலும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இனிமேல் இயக்கித் தயாரித்து வெளிவரவுள்ள அனைத்துப் படங்களுக்கும் தடைவிதிக்க வேண்டும்” என அந்த மனுவில் கோரியிருந்தார்.

நேற்று இம்மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி,  வழக்கு தொடர்பாகப் பதில் அளிக்குமாறு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகர் விஜய் ஆகிய இரண்டு பேருக்கும் வழக்குக் கடிதம் அனுப்ப உத்தரவிட்டார்.

மேலும் வழக்கு விசாரணையை வரும் 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.