கோலாலம்பூர் – அமெரிக்காவில் வெள்ளரிக்காய் மூலம் சல்மோனெல்லா (salmonella) என்ற கிருமி பரவி வருவதாக அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புப் பிரிவு கண்டறிந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, இந்நோயினால் 558 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 3 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சிஎன்என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நோய் தாக்கியவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 18 வயதிற்கும் குறைவானவர்கள் என்றும், கலிபோர்னியா மாகாணங்களில் தான் அதிகமானோரை இந்நோய் தாக்கியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக அந்நாட்டில் 24 மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்ட வெள்ளரிக்காய்கள் மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த நோய் பரவியதற்கான காரணம் குறித்து அந்நாட்டு உணவு மற்றும் மருந்துகள் நிர்வாக இலாகா தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது.
மலேசியாவைப் பொறுத்த வரையில், நமது பாரம்பரிய உணவான நாசி லெமாவில் முக்கிய அங்கமாக வெள்ளரிக்காய் இடம்பெற்றுள்ளது. அதே நேரத்தில் பெரும்பாலான சாலட் வகை உணவுகளில் வெள்ளரிக்காய் பயன்படுத்தப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.