Home கலை உலகம் டுவிட்டரில் ரசிகர்களுக்கு விஜய், முருகதாஸ், அனிருத் நன்றி!

டுவிட்டரில் ரசிகர்களுக்கு விஜய், முருகதாஸ், அனிருத் நன்றி!

893
0
SHARE
Ad

Vijay, Murugadoss, Anirudhசென்னை ஜனவரி 31 – ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து சென்ற வருட தீபாவளி சிறப்பாக வெளியான படம் ‘கத்தி’. இப்பபடத்திற்கு இசை அனிருத். சென்ற வருடத்தில் அதிகம் வசூல் செய்த படமாக பதிவாகியுள்ள ‘கத்தி’ நேற்றுடன் 100-வது நாளை நிறைவு செய்துள்ளது.

இதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ‘கத்தி சென்சுரி’ (#KATHTHIHitsCentury ) என டுவிட் செய்து கொண்டாடினர். மேலும் படக்குழுவினரும் தங்களது சார்பில் சமூகவலைத்தளத்தில் அனைவருக்கும் நன்றியை தெரிவித்திருக்கிறார்கள்.

இதில் விஜய் தன்  டுவிட்டர் பக்கத்தில் “ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். நீங்கள் கொடுத்த அன்புக்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தை போதாது”.

#TamilSchoolmychoice

“இத்தனை வருடமாக நான் சம்பாதித்த மிகப்பெரிய சொத்து நீங்கள் தான் என தெரிவித்துள்ளார். உங்கள் ஆதரவிற்கு நன்றி” என டுவீட் செய்துள்ளார் விஜய்.

vijay,aniruthஏ.ஆர்.முருகதாஸ் டுவிட்டர் பக்கத்தில் “ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இளைய தளபதி விஜய், தயாரிப்பாளர்கள், மொத்த படக்குழுவினர் மற்றும் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி” என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

படத்தின் இசையமைப்பாளர் அனிருத் டுவிட்டர் பக்கத்தில் “கத்தி படக்குழுவிற்கும் மற்றும் ரசிகர்களுக்கும் நன்றி. ஏ.ஆர்.முருகதாஸ், விஜய், சமந்தா, ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.