Home கலை உலகம் ரசிகர்கள்தான் என் முதலாளி – ‘கத்தி’ வெற்றி விழாவில் விஜய்!

ரசிகர்கள்தான் என் முதலாளி – ‘கத்தி’ வெற்றி விழாவில் விஜய்!

658
0
SHARE
Ad

vijay,நெல்லை, டிசம்பர் 16 – ‘கத்தி’ படத்தின் 50-வது நாள் வெற்றி விழா நெல்லையில் கொண்டாட்டப்பட்டது. இதில் விஜய், சதீஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர். திரண்டிருந்த ரசிகர்கள் விஜய்க்கு பலத்த கைத்தட்டல்களுடன் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

சில நலத்திட்ட உதவிகளை செய்த விஜய், ரசிகர்களுக்காகப் பேசினார். ”எதிர்ப்பு இல்லாமல் வாழ்க்கை இல்லை. தட்டிப்பறிப்பவன் வாழ்ந்தது இல்லை. விட்டுக்கொடுப்பவன் வீழ்ந்தது இல்லை. ஆனால், இன்றைய நிலையில் தட்டியும் பறிக்காதீர்கள். விட்டும் கொடுக்காதீர்கள்”.

“நாம் என்ன ஆயுதம் எடுக்கவேண்டும் என்பதை எதிரிதான் தீர்மானிக்கிறான். எதிரி அன்பாகப் பேசினால் நாமும் அன்பாகப் பேசுவோம். வேறு மாதிரி பேசினால் நாமும் வேறு மாதிரிதான் பேச வேண்டும். நல்லவர்கள் ஜெயித்தால் அனுபவம். கெட்டவர்கள் ஜெயித்தால் அவமானம்”.

#TamilSchoolmychoice

“என் ரசிகர்களாகிய நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும். குடும்பத்தைக் கவனிக்காமல்  என் படத்தை ரசிக்கும் ரசிகன் எனக்குத் தேவையில்லை. உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு முதலாளி இருப்பார். எனக்கு என் படத்தை ரசிக்கும் நீங்கள்தான் என் முதலாளி” என்று விஜய் பேசினார்.