Home கலை உலகம் ஏழு பிலிம்பேர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட கத்தி!

ஏழு பிலிம்பேர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட கத்தி!

684
0
SHARE
Ad

kaththi-movie-posterசென்னை, ஜூன் 5 – விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருக தாஸ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கத்தி படம், ஏழு பிலிம்பேர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், இந்திய சினிமாத் துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான பிலிம்பேர் விருது இந்த வருடமும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்திய அளவில் கடந்தாண்டு வெளியான திரைப்படங்களில் மொழி ரீதியான சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் இதர பிரிவுகளுக்கு விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன.

இந்நிலையில் தமிழ் படமான ‘கத்தி’ சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் உட்பட ஏழு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பிரச்சனையை மையக் கருவாக கொண்டு வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

#TamilSchoolmychoice

விஜய் தொலைக்காட்சி விருதுகளில் இந்த படம் பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருந்தாலும் ஏனோ அதிக விருதுகளை குவிக்க வில்லை. இந்நிலையில், பிலிம்பேர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதில் சிறந்த நடிகருக்கு மட்டுமல்லாமல் சிறந்த பாடகருக்கான பிரிவிலும் விஜய் ‘செல்ஃபி புள்ள’ பாடலுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்பது கூடுதல் தகவலாகும்.