புதுடெல்லி, செப்டம்பர் 19 – இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனரும், கேட்ஸ் அறக்கட்டளையின் தலைவருமான பில் கேட்ஸ் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
உலகின் மிகப் பெரிய பணக்காரராக பட்டியலிடப்பட்டுள்ள பில்கேட்ஸ் தனது மனைவி மலின்டாவுடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவருகிறார். மேலும் பில்கேட்ஸ் அறக்கட்டளை இந்தியாவில் செயல்படுத்தும் சுகாதார திட்டங்களையும் அவர் மேற்பார்வையிடுகிறார்.
பில்கேட்ஸும் அவரது மனைவியும் பிரதமர் அலுவலகத்தில் நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பில் கேட்ஸ்,
பிரதமர் மோடி அறிவித்துள்ள “சுத்தமான இந்தியா” (கிளீன் இந்தியா) திட்டத்தை தான் பாராட்டுவதாகவும், மக்களின் பழக்க வழக்கங்களை மாற்றுவதற்கான ஒரு முதல் முயற்சியே கழிவறை கட்டும் திட்டம் என்றும் தெரிவித்தார்.