Home கலை உலகம் தனக்கு ஆதரவு தந்த இயக்குனர் சங்கத்திற்கு ரூ 25 லட்சம் உதவிய விஜய்!

தனக்கு ஆதரவு தந்த இயக்குனர் சங்கத்திற்கு ரூ 25 லட்சம் உதவிய விஜய்!

444
0
SHARE
Ad

vijay,சென்னை, செப்டம்பர் 19 – தனக்கு தோள் கொடுத்த இயக்குநர் சங்கத்துக்கு, ரூ 25 லட்சம் கொடுத்து உதவியிருக்கிறார் நடிகர் விஜய். உதவி இயக்குநர்கள் சம்பள பிரச்சனை உள்பட பல பிரச்சனைகளில் இயக்குநர்கள் சங்கம் செயல்பட்டு வருவதைக் கேள்விப்பட்ட விஜய், தானாகவே முன்வந்து இந்த நிதி உதவியை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த தகவலை, நிதியை பெற்ற இயக்குநர் சங்கத்தைச் சேர்ந்த பிரபல இயக்குநர் ஒருவர் கூறியுள்ளார். விஜய்யின் இந்த உதவிக்குக் காரணம், இயக்குநர் சங்கம் அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதுதான்.

“கத்தி” பிரச்சனையில் விஜய்க்காக பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து ஆதரவு தெரிவித்தார்கள். ஜெயலலிதாவை இலங்கை அரசு இணையத்தளத்தில் அவதூறாகச் சித்தரித்ததற்காக இலங்கை தூதரகம் முன் நடத்தப்பட்ட இயக்குநர் சங்க போராட்டத்திலும் விஜய்க்குதான் முக்கியத்துவம் அளித்தார்களாம். எனவே தனக்கு ஆதரவாக நிற்கும் சங்கத்தின் நிதிப் பிரச்சனைக்கு கைகொடுத்து உதவியிருக்கிறாராம் விஜய்.