Home இந்தியா இந்தியா மீண்டும் எழுச்சி பெறும் – பிரதமர் மோடி!

இந்தியா மீண்டும் எழுச்சி பெறும் – பிரதமர் மோடி!

522
0
SHARE
Ad

narendra-modiபுதுடெல்லி, செப்டம்பர் 22 – பிரதமர் நரேந்திர மோடி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “இந்த நாடு ஒரு காலத்தில் தங்கப்பறவை என அழைக்கப்பட்டது. ஆனால், இதற்கு முன்பு இருந்த நல்ல நிலையில் இருந்து நாம் வீழ்ந்து விட்டோம்.

இருப்பினும், இந்த வீழ்ச்சியில் இருந்து நாம் மீண்டு எழுவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. கடந்த 5 அல்லது 10 நூற்றாண்டுகளாக இந்தியாவும் சீனாவும் சம அளவில் வளர்ந்து வந்திருப்பதை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம்.

இந்த உலக அளவிலான உள்நாட்டு உற்பத்தியில் இவ்விரு நாடுகளும் அளித்த பங்களிப்பும், வீழ்ச்சியும் சம அளவிலேயே இருக்கும். இன்று ஆசியாவுக்கு புதிய சகாப்தம் கிடைத்துள்ளது. இந்தியாவும் சீனாவும் ஒன்றுக்கொன்று அபரிமிதமாக வளர்ந்துள்ளன.

#TamilSchoolmychoice

அதேநேரத்தில், இந்தியா எந்த நாடு போலவும் ஆக விரும்பவில்லை. இந்தியாவாகவே இருக்க விரும்புகிறது.
இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களின் தொழில்திறன் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. அவர்கள் தொழிலதிபர் என்ற நிலையை அடைவதற்கான திட்டமும் என்னிடம் உள்ளது.

அதேபோல மக்களாட்சியாக இல்லாமல் சீனாவை போன்று அதிகார ஆட்சி இந்தியாவுக்கு தேவையில்லை. நாட்டு மக்களிடம் பெரும் நம்பிக்கை உள்ளது. இது எந்த தருணத்திலும் வீணாகாது.

மக்களின் நம்பிக்கையை பேச்சின் மூலமாக அல்லாமல், செயலின் மூலம் நான் பெற்றுவிட்டேன் என்றால், 125 கோடி மக்களின் சக்தி இந்தியாவை வளர்ச்சிப்பாதைக்கு எடுத்துச்செல்லும்.

எல்லை பிரச்சனையை பொறுத்தவரை, உலக அளவில் உள்ள சட்ட நடைமுறைகளை சீனா மதித்து பின்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்நாட்டுடன் இணக்கமாக செயல்பட்டு முன்னேறுவோம். அதற்காக, எந்த பிரச்சனையையும் கண்டுகொள்ளாமல் இருக்க மாட்டோம் என மோடி கூறினார்.