Home கலை உலகம் மலேசியக் கலையுலகம்: ஜாஸ்மின் இயக்கத்தில் விரைவில் ‘காஃபி வித் பிள்ளை அஸ்பாலன்’ புதிய நிகழ்ச்சி!

மலேசியக் கலையுலகம்: ஜாஸ்மின் இயக்கத்தில் விரைவில் ‘காஃபி வித் பிள்ளை அஸ்பாலன்’ புதிய நிகழ்ச்சி!

696
0
SHARE
Ad

coffeeகோலாலம்பூர், செப்டம்பர் 24 –  மலேசியக் கலைத்துறையில் ஜாஸ்மின் மிக அழகான நடிகை என்பது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு விழாவிற்கும் ஜாஸ்மின் வித்தியாசமான சிகை அலங்காரத்துடன் வந்து அனைவரையும் வியக்க வைப்பார்.

ஆனால் அந்த அழகுக்குப் பின்னால் இருக்கும் அந்த சிகை அலங்காரக் கலைஞர் யார் என்று ஆராய்ந்து பார்த்தால். அவரது சகோதரர் ஆன பிள்ளை அஸ்பாலன் தான்.

பிள்ளை ஹேர் ஸ்டூடியோ என்ற நிறுவனத்தை திறம்பட நடத்துவதோடு, தனது தனித் திறமையால் ஜாஸ்மின் மட்டுமல்லாது, மலேசியக் கலைஞர்கள் பலருக்கும் மிக அழகான சிகை அலங்காரங்களை செய்து வருகின்றார் இந்த இளைஞர்.

#TamilSchoolmychoice

coffee 1

இன்றைய காலத்தில், தனக்கு இருக்கும் அனைத்து திறமைகளை சோதனை செய்து பார்க்கும் சூழலும், நவீன வசதிகளும் இருப்பதால், சிகை அலங்காரக் கலைஞராக மட்டுமே இருந்த பிள்ளை அஸ்பாலன் ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் உருவாகவுள்ளார்.

‘காஃபி வித் பிள்ளை அஸ்பாலன்’ என்ற புதிய நிகழ்ச்சி ஒன்றை விரைவில் துவங்கவுள்ள அவர், அதன் வழியாக மலேசியக் கலைத்துறையில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்களை சுவாரஸ்யமான கேள்விகளோடு, பேட்டி எடுக்கவுள்ளார்.

இந்த நிகழ்ச்சி முதலில் யூடியூப்பில் ஒரு சில வாரங்கள் வெளியிடப்பட்டு பின்னர் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகவுள்ளதாக பிள்ளை அஸ்பாலன் செல்லியலிடம் தெரிவித்தார்.

IMG_3119 (1)

சரி …. இந்த விறுவிறுப்பான நிகழ்ச்சியை இயக்கப் போவது யார் என்ற கேள்வி எழலாம். அவர் வேறு யாரும் அல்ல இயக்குநர் ஜாஸ்மின் தான்.

இந்த நிகழ்ச்சியின் சில தொகுப்புகள் படப்பிடிப்பு பணிகள் எல்லாம் நிறைவடைந்து, தீபாவளி முதல் விறுவிறுப்பாக துவங்கவுள்ளதாக ஜாஸ்மின் செல்லியலிடம் தெரிவித்தார்.

-ஃபீனிக்ஸ்தாசன்

please install flash