Home தொழில் நுட்பம் உலகை இணையத்தால் இணைக்க ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தும் பேஸ்புக்!

உலகை இணையத்தால் இணைக்க ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தும் பேஸ்புக்!

471
0
SHARE
Ad

droneகோலாலம்பூர், செப்டம்பர் 26 – பேஸ்புக், உலகை இணையம் மூலம் இணக்க முயன்று வருகின்றது என கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கருத்தரங்கு ஒன்றில் மார்க் சக்கர்பெர்க்  தெரிவித்து இருந்தார்.

அதற்கான சாத்தியக் கூறுகளில் மிக முக்கியமான ஒன்று ஆளில்லா விமானங்கள். ஆளில்லா விமானங்கள் மூலம் உலகில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சமிக்ஞைகளை அனுப்பி, இணையப் பயன்பாட்டை பெருக்குவதே பேஸ்புக்கின் நோக்கமாகும்.

இது பற்றி பேஸ்புக் ஆய்வுப் பிரிவுகளின் பொறியியல் இயக்குனர் ஈல் மேகயர் கூறுகையில், “வர்த்தக ரீதியாகப் பயன்படும் விமானங்களை இணைய இணைப்பிற்காக பயன்படுத்துவதே பேஸ்புக்கின் நோக்கம்.”

#TamilSchoolmychoice

“மார்க் சக்கர்பெர்க்கின் இந்த புதிய யுக்தியின் மூலம் உலகை இணையத்தால் இணைக்க முடியும்.” “எனினும் அந்த விமானங்கள் தொழில்நுட்ப ரீதியாகவே பயன்படும். அவை ஆளில்லா விமானங்கள்.

தொடர்ந்து அந்த விமானங்கள் நமக்கு இணைய சமிக்ஞைகளை அனுப்ப வேண்டும் எனில், அவை சூரிய சக்தி மூலம் இயங்கக் கூடியதாக இருக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

பேஸ்புக் நிறுவனம் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி உலகை இணையம் மூலமாக இணைத்தால் சுமார் 140 மில்லியன் மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படும் என்று கூறப்படுகின்றது. மேலும், இதன் மூலம் வறுமையின் பிடியில் உள்ள 160 மில்லியன் மக்கள் பயன்பெறுவர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி, இணையத்தை அதிகரிக்கச் செய்யும் முயற்சியினை, பேஸ்புக் நிறுவனம் மட்டும் மல்லாமல் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனமும் முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.