Home வணிகம்/தொழில் நுட்பம் ஏர்பஸின் ஏ 320 நியோ விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது!

ஏர்பஸின் ஏ 320 நியோ விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது!

551
0
SHARE
Ad

A320_NEO_DETAILSடோல்ஹவுஸ், செப்டம்பர் 26 – ஏர்பஸ் நிறுவனம் தனது புதிய ஜெட் விமானமான ‘ஏர்பஸ் ஏ 320 நியோ’ (Airbus A320neo)-வை முதல் முறையாக நேற்று விண்ணில் செலுத்தியது.

பிரான்ஸ் நாட்டின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் தனது நீண்ட நாள் தயாரிப்பான, ஏர்பஸ் ஏ 320 நியோ விமானத்தின் சோதனை ஓட்டத்தை நேற்று வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டியது.

பிரான்ஸின் டோல்ஹவுஸ் நகர விமான நிலையத்தில் நடைபெற்ற இந்த சோதனை ஓட்டத்தில் விமானத்தின் முழு செயல்பாடுகளும் வல்லுநர்கள் கொண்ட குழுவினரால் ஆராயப்பட்டது.

#TamilSchoolmychoice

எரிபொருள் சிக்கனம் மிக்கதாகக் உள்ள ஏ 320 நியோ விமானத்தின் இயந்திரங்கள், ஏர்பஸின் முந்தைய தயாரிப்பான ஏ 320-ல் இருந்து முற்றிலும் மாறுபட்டு, மேம்படுத்தப்பட்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் கூறியுள்ளது.

உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு விமான போக்குவரத்து நிறுவனங்கள், 3,000-த்திற்கும் மேற்பட்ட ஏ 320 நியோ விமானங்களை வாங்க முன் பதிவு செய்யதுள்ள நிலையில், ஏ 320 நியோவின் வெற்றிகரமான சோதனை ஓட்டம் தங்கள் நிறுவனத்திற்கு பெரும் நம்பிக்கை அளிப்பதாக ஏர்பஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.