Home கலை உலகம் இளைஞர்களின் கடின முயற்சியில் உருவான ‘மித்திரன்’ குறும்படம்!

இளைஞர்களின் கடின முயற்சியில் உருவான ‘மித்திரன்’ குறும்படம்!

1002
0
SHARE
Ad

Mithiran 3

கோலாலம்பூர், செப்டம்பர் 27 – கலைத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு, இன்றைய நவீன தொழில்நுட்ப வசதிகள் பெரிதும் கைகொடுக்கின்றன. ஒரு திரைப்படத்தையோ அல்லது குறும்படத்தையோ அவர்களால் குறைந்த செலவில் மிக அழகாக உருவாக்க முடிகின்றது.

எனினும், அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்பதில் எந்த ஒரு மாறுபாடும் கிடையாது. அந்த வகையில் சினிமாத்துறைக்கு முற்றிலும் புதியவர்களான ‘மித்திரன்’ குறும்படக் குழுவினர், ஒற்றுமையுடன் இணைந்து தங்களது குறும்படத்தை மிகச் சிறப்பாக உருவாக்கியுள்ளனர்.

#TamilSchoolmychoice

‘மித்திரன்’ குறும்படத்தை இயக்கியவர் விக்கினேஸ் பிரபு. சுங்கை பட்டாணியைச் சேர்ந்தவரான இவர், கலைத்துறையில் மீதிருந்த ஆர்வம் காரணமாக பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகே இந்த குறும்படத்தை உருவாக்கியுள்ளார்.

Mithiran

இன்றைய இளைஞர்கள் குண்டர் கும்பல் போன்ற தவறான பாதைக்கு செல்வதையும், அதனால் அவர்களது வாழ்வில் ஏற்படும் துயரங்களையும் மையமாக வைத்து இந்த கதையை தனது தம்பியான தனேஷ் பிரபுவுடன் இணைந்து உருவாக்கியுள்ளதாக விக்கினேஸ் பிரபு தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த விக்கினேஸ் பிரபு, சலாம் குழுவினரின் ‘அழகு’ என்ற தனிப்பாடலின் காட்சிகளில் இயக்குநர் காத்திக் ‌ஷமலனால் அறிமுகப்படுத்தப்பட்டார். அதன் பின்னர் சில குறும்படங்களில் நடித்த அவர் தற்போது ‘மித்திரன்’ மூலமாக இயக்குநராகவும் உருவாகியுள்ளார்.

இந்த குறும்படத்தின் முன்னோட்டம் நேற்று யூடியூப்பில் வெளியிடப்பட்டு தற்போது பேஸ்புக்கில் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.

Mithiran1

(இயக்குநர் விக்கினேஸ் பிரபு)

‘மித்திரன்’ குறும்படத்தை விக்கினேஸ் பிரபுவின் தந்தை டாக்டர் லச்சா பிரபு தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு கதை வசனம் தனேஷ் பிரபுவும், இணை இயக்குநராக விக்கினேஸ் ரான் மற்றும் உதவி இயக்குநராக தீபன் ராஜ் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

இந்த குறும்ப்படத்திற்கு ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் பின்னணி இசை ஆகிய பணிகளை முனிகாந்த் செய்துள்ளார்.

மேலும், இந்த ‘மித்திரன்’ குழுவில் கலை இயக்குநராக இளன் கோவிந்த், தயாரிப்பு நிர்வாகத்தில் தீபக், முன்னா, கிளமென், வான் முகிலன், விஷ்ணு, ரவிந்த் அமரீசன், சோமு, குமரேசன் ஆகியோரும் பணியாற்றியுள்ளனர்.

‘மித்திரன்’ குறும்படத்தின் முன்னோட்டத்தை இங்கே காணலாம்: