Home உலகம் செல்வாக்கு சரிந்ததன் எதிரொலி: தேர்தலை முன்கூட்டியே நடத்த ராஜபக்சே திட்டம்!

செல்வாக்கு சரிந்ததன் எதிரொலி: தேர்தலை முன்கூட்டியே நடத்த ராஜபக்சே திட்டம்!

428
0
SHARE
Ad

rajapaksha2கொழும்பு, செப்டம்பர் 27 – இலங்கையில் ஊவா மாகாண தேர்தலில் ராஜபக்சேவின் கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, முன்கூட்டியே அதிபர் தேர்தலை நடத்த ராஜபக்சே திட்டமிட்டுள்ளார்.

கொழும்பில், நிருபர்களை சந்தித்த இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுத்துறை அமைச்சர் பசில் ராஜபக்சே, அடுத்த ஆண்டு ஜனவரியில் அதிபர் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்ப்பதாக கூறினார்.

முறைப்படி இலங்கை அதிபர் தேர்தலானது, 2016 நவம்பரில்தான் நடைபெற வேண்டும். இருப்பினும், 4 ஆண்டுகள் முடிந்த பின்னர் தேர்தலை நடத்தும் அதிகாரம் அதிபருக்கு உண்டு.

#TamilSchoolmychoice

இதற்கிடையே நடந்து முடிந்த ஊவா மாகாண தேர்தல் முடிவுகள், ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணிக்கு (யுபிஎப்ஏ) கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

22 சதவீத வாக்குகளையும், 6 தொகுதிகளையும் ராஜபக்சே கூட்டணி இழந்துள்ளது. தனது செல்வாக்கு சரிந்து வருவதால், ராஜபக்சே கடும் நெருக்கடியில் உள்ளார்.

நாட்கள் செல்லச்செல்ல நிலைமை மேலும் மோசமாகும் என கருதுவதால், அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கு ஏதுவாக, இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவி வகிக்கக்கூடாது என்கிற விதிமுறையை நீக்கி தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் மூலம் கடந்த 2005-லிருந்து இரண்டாவது முறையாக அதிபர் பதவி வகித்து வரும் ராஜபக்சே, மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.