இந்நிலையில் அமைதியை குறிக்கும் விதமாக வெள்ளை நிற குர்தா, பைஜாமா உடையுடன் இந்த நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்தார் மோடி.மஞ்சள் ரோஜாக்களை நினைவிடத்தில் வைத்த அவர், பின்னர் தனது கரங்களை குவித்து நின்றபடி அஞ்சலி செலுத்தினார். இதன் மூலம் தீவிரவாதத்திற்கு எதிரான போருக்கு இந்தியாவின் ஆதரவை அவர் புலப்படுத்தி உள்ளதாக கருதப்படுகிறது.
இதையடுத்து 9/11 தாக்குதலையொட்டி அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்திற்கும் மோடி சென்றார்.அங்குள்ள பொருட்கள் ஒவ்வொன்றும் அத்தீவிரவாத தாக்குதலால் ஏற்பட்ட இழப்புகளை விவரிக்கக் கூடியவையாகும்.9/11 தாக்குதல் நினைவிடம் உலக வாணிப மையமும், இரட்டைக் கோபுரமும் முன்பிருந்த பகுதியிலேயே அமைக்கப்பட்டுள்ளது.