Home கலை உலகம் ஜெயலலிதா கைது: இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்த ரசிகர்களால் கோபமடைந்த விஜய்!

ஜெயலலிதா கைது: இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்த ரசிகர்களால் கோபமடைந்த விஜய்!

615
0
SHARE
Ad

vijayசென்னை, செப்டம்பர் 30 – ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை கிடைத்ததை இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடிய ரசிகர்களால் விஜய் கோபமாக உள்ளாராம்.

ஏற்கனவே விஜய் நடித்த தலைவா படத்தை வெளியிட படாதபாடு பட்டார்கள். இந்நிலையில் அவர் தற்போது நடித்துள்ள ‘கத்தி’ படத்திற்கு தயாரிப்பாளர் உருவத்தில் பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் ‘கத்தி’ படத்தின் உரிமத்தை வாங்க ஜெயா டிவி முன் வந்தது. ஆளுங்கட்சி தொலைக்காட்சியிடம் படம் செல்வதால் பிரச்சனை இன்றி வெளியாகும் என்று நிம்மதியாக இருந்தார்கள்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் தான் அவர்களின் நிம்மதி கெடும் வகையில் ஒரு தகவல் வெளியானது. ‘கத்தி’ படத்தின் உரிமத்தை வாங்கும் முடிவை தள்ளிப் போட்டு வைத்துள்ளது ஜெயா தொலைக்காட்சி என்று செய்திகள் வெளியாகின.

இத்தனை பிரச்சனை இருக்கையில் விஜய் ரசிகர்கள் ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை கிடைத்ததை இனிப்பு கொடுத்தும், பட்டாசுகள் வழங்கியும் கொண்டாடியுள்ளனர்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமான ஒருவர் தயாரித்த ‘கத்தி’ படத்தை வெளியிட விடமாட்டோம் என்று சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் விஜய் ரசிகர்கள் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்ததை கொண்டாடியுள்ளனர்.

ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்ததை தனது ரசிகர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடியது விஜய்க்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லையாம்.

பட்டாசு வெடித்து கொண்டாடியதோடு மட்டுமல்லாமல் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து யாரும் விவாதிக்க வேண்டாம் என விஜய் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டது போன்று யாரோ ஃபேஸ்புக்கில் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதனால் விஜய் மிகவும் கடுமையான கோபத்தில் உள்ளாராம்.