Home நாடு காலிட் அபு பக்காரின் பேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்த ஆல்வின்!

காலிட் அபு பக்காரின் பேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்த ஆல்வின்!

553
0
SHARE
Ad

alvin-tan-and-vivian-lee-selamat-buka-puasa-ramadhanகோலாலம்பூர், செப்டம்பர் 30 – ஆபாச வலைப்பதிவாளர் ஆல்வின் டான், தன் மீதுள்ள வழக்குகளிலிருந்து தப்பிக்க நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவாக இருப்பது அவரது காதலியான விவியான் லீக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது காதலர் ஆல்வினின் இந்த முடிவு முற்றிலும் சுயநலமான ஒன்று என்று தெரிவித்துள்ளார்.

ஆல்வினின் இந்த திடீர் தலைமறைவு தன்னையும், தனது தாயையும் மிகவும் பாதித்துள்ளது என்றும் விவியான் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இது குறித்து விவியான் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அவரின் இந்த செயல் மிகவும் குழந்தைத் தனமாகவும், பொறுப்பற்ற வகையிலும் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தலைமறைவாக உள்ள ஆல்வின் டான், தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்காரின் பேஸ்புக் பக்கத்தில், “குற்றங்களுக்கு எதிராகவும், ஊழலை ஒழிக்கவும் மட்டுமின்றி தேச நிந்தனைச் சட்டத்தில் மக்களைப் பிடிக்கவும் ஐஜிபி மிகவும் ஆர்வம் காட்டுகின்றார்” என்று தெரிவித்துள்ளார்.

ஆல்வின் உடனான காதலை தான் முற்றிலும் முறித்துக் கொண்டதாகவும், தன்னிடம் கடவுச் சீட்டு இருந்தாலும் கூட தான் வேறு நாட்டிற்குச் சென்று பதுங்கிக் கொள்ளப்போவதில்லை என்றும் விவியான் லீ தெரிவித்துள்ளார்.