Home நாடு ஆல்வின், அலியை கைது செய்ய இண்டர்போல் உதவியை நாடுகிறது மலேசியா!

ஆல்வின், அலியை கைது செய்ய இண்டர்போல் உதவியை நாடுகிறது மலேசியா!

577
0
SHARE
Ad

alvin_ali_L-11கோலாலம்பூர், அக்டோபர் 29 – வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் அலி அப்துல் ஜாலில் மற்றும் ஆபாச வலைப்பதிவாளர் ஆல்வின் டான் ஆகிய இருவரையும் கைது செய்ய மலேசிய காவல்துறை அனைத்துலக குற்ற ஒழிப்புத் துறையின் உதவியை நாடியிருக்கின்றது.

இது குறித்து தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் கூறுகையில், அந்த இருவரும் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சமடைய விண்ணப்பித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அலி ஸ்வீடன் நாட்டிலும், ஆல்வின் அமெரிக்காவிலும் அரசியல் தஞ்சமடைய விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice

“மலேசிய காவல்துறை இந்த இருவர் குறித்து அனைத்துலக குற்ற ஒழிப்புத் துறைக்கு தகவல் அனுப்பியுள்ளது. அவர்களின் பதிலுக்காகவும் காத்திருக்கிறது” என்று நேற்று செராஸ் காவல்துறை கல்லூரியில் நடைபெற்ற காவல்துறை தலைவர்களுக்கான கருத்தரங்கில் கலந்து கொண்ட பின்னர் காலிட் இந்த தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ரமலான் மாதத்தில் இஸ்லாம் அவமதிக்கும் விதமாக தனது வலைத்தளத்தின் கருத்து தெரிவித்ததற்கும், தனது காதலி விவிலியானுடன் ஆபாசமாக இருக்கும் புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டதற்காகவும் ஆல்வின் மற்றும் விவிலியான் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து தப்பிக்கும் நோக்கில் ஆல்வின் அமெரிக்காவில் தலைமறைவாக உள்ளார்.

மலேசிய அரசாங்கத்தை அவமதிக்கும்படியான கருத்துகளை பேஸ்புக்கில் பதிவு செய்ததற்காக அலியும் தேச நிந்தனைக் குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார். அவர் தற்போது ஸ்வீடன் நாட்டில் அடைக்கலம் புகுந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.