Home நாடு முடிந்தால் கடப்பிதழை ரத்து செய்யுங்கள் – ஆல்வின் டான் சவால்

முடிந்தால் கடப்பிதழை ரத்து செய்யுங்கள் – ஆல்வின் டான் சவால்

576
0
SHARE
Ad
alvin sex blogger
அல்வின் தான் – பழைய கோப்புப் படம்
கோலாலம்பூர், டிசம்பர் 8 – முடிந்தால் எனது கடப்பிதழை ரத்து செய்யுங்கள் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடிக்கு வலைப்பதிவாளர் ஆல்வின் டான் சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “இதைச் செய்யுங்கள்” என அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் விதமாக, அவர் சுருக்கமாக பதிவிட்டுள்ளார்.

ஆல்வின் டானின் கடப்பிதழ் அரசாங்கத்தின் சொத்து என்பதால் அதை ரத்து செய்ய அரசுக்கு அனைத்து அதிகாரமும் இருப்பதாக சாஹிட் ஹமிடி அறிவித்த சில மணி நேரங்களில் ஆல்வின் டான் ஃபேஸ்புக்கில் தனது கருத்தை வெளியிட்டார்.

“வெறும் மிரட்டல் வேண்டாம்… கோழையாக இருக்காதீர்கள்…” என்று ஆல்வின் டான் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு சிலாங்கூர் மாநிலம் வழங்கிய பட்டத்தை திரும்பப் பெறுவதாக அம்மாநில சுல்தான் அண்மையில் அறிவித்தது தொடர்பில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சில கருத்துக்களை பதிவிட்டிருந்தார் ஆல்வின் டான். இதையடுத்து அவரது கடப்பிதழ் ரத்து செய்யப்படுவதாகத் தெரிகிறது.