Home Featured நாடு அவமதிப்பு வழக்கு: விவியன் லீ-க்கு 6 மாத சிறைத் தண்டனை!

அவமதிப்பு வழக்கு: விவியன் லீ-க்கு 6 மாத சிறைத் தண்டனை!

669
0
SHARE
Ad

alvin-tan-and-vivian-lee-selamat-buka-puasa-ramadhanகோலாலம்பூர் – பேஸ்புக்கில் இஸ்லாமியர்களை அவமதிக்கும் விதமாக கருத்துத் தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய ஆபாச வலைப்பதிவாளர் ஆல்வின் டானின் முன்னாள் காதலி விவியன் லீக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது அமர்வு நீதிமன்றம்.

விவியன் லீ மே லிங்கிற்கு (வயது 27) எதிராக அரசுத் தரப்பு போதுமான சாட்சியங்களை அளித்து வெற்றி பெற்றதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நீதிபதி அப்துல் ரஷீத் டாவுத் தெரிவித்துள்ளார்.

நேற்று முதல் இந்த தண்டனைக் காலம் துவங்குவதாகவும் அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

எனினும், சிறைத் தண்டனையைக் குறைக்குமாறு எதிர்தரப்பு அளித்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அவர் ஏற்கனவே 8 நாட்கள் தடுப்புக் காவலில் இருந்த நாட்களைக் கழித்து, சிறைத் தண்டனையை 5 மாதங்கள் 22 நாட்கள் என அறிவித்துள்ளார்.

அதோடு, மேல்முறையீட்டைக் கருத்தில் கொண்டு தண்டனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் அனுமதி வழங்கிய நீதிபதி, பிணைத்  தொகையை 10,000 ரிங்கிட் இருந்து 20,000 ரிங்கிட்டாக உயர்த்தியுள்ளார்.