Home Featured இந்தியா தேசிய கீதம் இசைத்தபோது பரூக் அப்துல்லா செல்பேசியில் பேசியதால் சர்ச்சை!

தேசிய கீதம் இசைத்தபோது பரூக் அப்துல்லா செல்பேசியில் பேசியதால் சர்ச்சை!

914
0
SHARE
Ad

farook_abdulகொல்கத்தா – மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பதவியேற்வு விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா செல்போனில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இமாலய வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

பதவியேற்பு விழாவில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, தேசிய கீதம் இசைக்கப்படும் போது செல்பேசியில் பேசும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நிற்கும் பரூக் அப்துல்லா, செல்பேசியில் யாருடனோ பேசிக்கொண்டிருக்கிறார்.

இந்த காணொளியானது தற்போது இணையத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் பல்வேறு தரப்பினர் அவரது இந்த நடவடிக்கை குறித்து விமர்சனம் செய்தும் வருகின்றனர்.