Home Featured நாடு சபாவை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது – நஜிப் திட்டவட்டம்!

சபாவை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது – நஜிப் திட்டவட்டம்!

550
0
SHARE
Ad

Najib-லகாட் டத்து – சுலு சுல்தான் மூலமாக சபா மாநிலத்தை திருப்பப்பெற சில தரப்பினர் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுவதை மறுத்துள்ள மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், சபா மாநிலம் மலேசியாவைச் சேர்ந்தது தான் என்று அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த விவகாரம் ஒரு பிரச்சனையே அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுல்தான்களின் வாரிசுகளுக்காக, சபா மாநிலத்தைத் திரும்பப் பெற பிலிப்பைன்ஸ் அதிபர் எலெக்ட் ரோட்ரிகோ டுர்டெர்டே திட்டமிட்டிருப்பதாகக் கூறும் அவரது அறிக்கை குறித்து லகாட் டத்துவில் இன்று பிரதமர் நஜிப் துன் ராக்கிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், கடந்த 1963-ம் ஆண்டு சபா மாநிலம் மலேசியாவின் ஒரு பகுதி தான் என்ற அனைத்துலக அங்கீகாரம் ஐக்கிய நாடுகளின் மூலமாகக் கிடைத்ததாகவும் நஜிப் சுட்டிக் காட்டியுள்ளார்.

எனவே, எந்த ஒரு தரப்பும் சபாவை சொந்தம் கொண்டாட முடியாது என்றும் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.