Home Featured நாடு ஆல்வின் அதை விளையாட்டாகத் தான் செய்தார் – விவியன் லீ விளக்கம்!

ஆல்வின் அதை விளையாட்டாகத் தான் செய்தார் – விவியன் லீ விளக்கம்!

687
0
SHARE
Ad

alvin-tan-and-vivian-lee-selamat-buka-puasa-ramadhanகோலாலம்பூர் – நோன்பு மாதம் ஒன்றில் இஸ்லாமியர்களை அவமதிப்பது போல் இணையத்தில் கருத்துத் தெரிவித்து, சர்ச்சையில் சிக்கிய வலைப்பதிவாளர் ஆல்வின் டானின் செயல் குறித்து, அமர்வு நீதிமன்றத்தில் இன்று அவரது முன்னாள் காதலி விவியன் லீ விளக்கமளித்துள்ளார்.

அதில், கடந்த 2013-ம் ஆண்டு, ஜூலை 10-ம் தேதி, ஜாலான் ஈப்போ அருகே உணவகம் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, புகைப்படம் எடுத்து, “பக்குத்தேவுடன் நோன்பு திறக்க வாருங்கள்” என்று விளையாட்டாக ஆல்வின் டான் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்ததாக விவியன் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்தக் குறிப்பிட்ட பேஸ்புக் பக்கத்தில் இருவருமே நிர்வாகிகள் என்பதால், தன்னிடம் அனுமதி பெறாமலேயே அப்புகைப்படத்தையும், சர்ச்சையான கருத்தையும் தெரிவித்துவிட்டதாகவும் விவியன் லீ குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

முதலில் அப்புகைப்படத்தில் பதிவு செய்த சர்ச்சையான கருத்தை நீக்க மறுத்த ஆல்வின் டான், பின்னர் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வரத் தொடங்கியவுடன், “எல்லோரும் எங்களை மன்னியுங்கள். கோழியுடன் (chicken rendang) நோன்பு திறக்க வாருங்கள்” என்று மாற்றி எழுதியதாகவும் விவியன் லீ தெரிவித்துள்ளார்.

அந்த சமாதானக் கருத்தால் பிரச்சனை அடங்கிவிடும் என்று தாங்கள் எதிர்பார்த்ததாகவும், ஆனால் நிலைமை இன்னும் மோசமடைந்து அது மேலும் பலரை ஆத்திரத்திற்கு உள்ளாக்கியதாகவும் விவியன் லீ தெரிவித்துள்ளார்.

மேலும், ஆல்வின் டானின் இந்தச் செயலால் தான் சோகமும், கோபமும் அடைந்ததாகவும், தான் எவ்வளவோ எடுத்துக் கூறியும் ஆல்வின் அப்புகைப்படத்தையும், கருத்தையும் நீக்க மறுத்துவிட்டதாகவும் விவியன் லீ நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.