Home Featured தமிழ் நாடு சரத்குமார் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு!

சரத்குமார் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு!

582
0
SHARE
Ad

sarathkumar_8திருச்செந்தூர்  – திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் சரத்குமார் மீது, ஆவணமின்றி அதிகளவு பணம் கொண்டு சென்றதாக ஆறுமுகநேரி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள நல்லூர் சோதனைச் சாவடியில், கடந்த 7-ஆம் தேதி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்ட போது, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் காரிலிருந்து 9 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர்.

உடடினயாக அவற்றை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், திருச்செந்தூர் வட்டாட்சியர் சங்கர நாராயணனிடம் ஒப்படைத்தனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு இன்று வரை ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தால், தேர்தல் பறக்கும் படை வட்டாட்சியர் வள்ளிக்கண்ணு, வேட்பாளர் சரத்குமார் மீது ஆவணமின்றி அதிகமான அளவு பணம் கொண்டுவந்ததாக ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார்அளித்தார். இதுகுறித்து ஆறுமுகநேரி காவல்துறையினர் சரத்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.