Home கலை உலகம் விரைவில் 2016 மோடி + விஜய் = தமிழகம்! புதிய சுவரொட்டியால் பரபரப்பு!

விரைவில் 2016 மோடி + விஜய் = தமிழகம்! புதிய சுவரொட்டியால் பரபரப்பு!

566
0
SHARE
Ad

vijay-modiசென்னை, அக்டோபர் 1 – நடிகர் விஜய்யை நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள் போல அவரது ரசிகர்கள். ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடிய ரசிகர்களால் நடிகர் விஜய் பெரும் மனவேதனையடைந்தார்.

இந்த நிலையில் விஜய்யின் படத்தைப் போட்டு மேலும் ஒரு பரபரப்பு சுவரொட்டியை ஒட்டி அவரை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளனர் அவரது ரசிகர்கள்.

vijay modiசொத்துக் குவிப்புவழக்கில் ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பிய நீதிபதி மைக்கேல் டி.குன்ஹாவுக்கு நன்றி தெரிவித்து புதிய சுவரொட்டி விஜய் படத்துடன் வெளியாகியுள்ளது.

#TamilSchoolmychoice

அந்தப் சுவரொட்டியில் இடம் பெற்றுள்ள வாசகம்… நன்றி நன்றி நன்றி தமிழகத்தில் இருந்து எங்களுக்கு விடுதலை வாங்கித் தந்த பிரதமர் மோடி அவர்களுக்கும், நீதிபதி குன்ஹா அவர்களுக்கும் எங்கள் இயக்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

vijay-poster“விரைவில் 2016 மோடி + விஜய் = தமிழகம்”

இளையதளபதி விஜய் மக்கள் இயக்கம் என்று அதில் போட்டுள்ளனர். இப்படி சுவரொட்டியை ஒட்டி விஜய் நிம்மதியைக் கெடுத்துவிட்டனர் அவரது ரசிகர்கள்!