Home நாடு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பொறுப்புகளை அறிவித்தார் அஸ்மின் அலி!

மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பொறுப்புகளை அறிவித்தார் அஸ்மின் அலி!

662
0
SHARE
Ad

azmin-ali2சிலாங்கூர், அக்டோபர் 1 – சிலாங்கூர் மந்திரி பெசாரான அஸ்மின் அலி, தனது மற்றும் சிலாங்கூர் 10 மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பொறுப்புகளை அறிவித்துள்ளார்.

அதன் படி, அஸ்மின் அலி அறிவித்துள்ள ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பொறுப்புகள் பின்வருமாறு:-

1. அஸ்மின் அலி (பிகேஆர்- புக்கிட் அந்தர்பாங்சா) – மாநில நிதி, நில வளர்ச்சி, இயற்கை வளம், பொருளாதார நடவடிக்கை குழு மற்றும் தகவல்தொடர்பு ஆகிய பிரிவுகளின் தலைவர்

#TamilSchoolmychoice

2. டத்தோ தெங் சாங் கிம் ( ஜசெக -சுங்கை பினாங்கு) – முதலீடு, நிறுவனங்கள், வர்த்தகம் மற்றும் போக்குவரத்து ஆகிய பிரிவுகளின் தலைவர்

3. இஸ்கண்டார் சமட் (பாஸ் – செம்பாக்கா) – வீடு, வளர்ச்சி மேலாண்மை மற்றும் நகர்புற வாழ்க்கை பிரிவுத் தலைவர்

4. எலிசபெத் வோங் (பாஸ் – புக்கின் லாஞ்சான்) – சுற்றுலா, சுற்றுச்சூழல், பசுமை தொழில்நுட்பம் மற்றும் நுகர்வியம் பிரிவுத் தலைவர்

5. இயான் யோங் வா (ஜசெக – ஸ்ரீகம்பாங்கன்) – மாநில அரசாங்கம், புது கிராம வளர்ச்சி மற்றும் தொழிற்சாலைகளை சட்டப்பூர்வமாக்குதல் பிரிவுத் தலைவர்

6. டாக்டர் அகமட் யூனோஸ் ஹைரி (பாஸ் – சிஜாங்காங்) – இஸ்லாமிய விவகாரங்கள், மலாய் சுங்கத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் கிராம வாழ்வியல் பிரிவுத் தலைவர்

7. நிக் நஸ்மி நிக் அகமட் (பிகேஆர் – ஸ்ரீ செத்தியா) – கல்வி, மனிதவளம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு பிரிவுத் தலைவர்

8. வி.கணபதிராவ் (ஜசெக – கோத்தா ஆலம் ஷா) – வறுமை, அரசாங்க உதவித்தொகை மற்றும் தோட்டப்புறத் தொழிலாளர்கள் பிரிவுத் தலைவர்

9. டாக்டர் டரோயா ஆல்வி (பிகேஆர் – செமெண்டா) – சுகாதாரம், பொதுநலம், மகளிர் மற்றும் குடும்ப விவகாரங்கள் பிரிவுத் தலைவர்

10. அமிருடின் ஷாரி (பிகேஆர் – பத்துமலை) – இளைஞர் வளர்ச்சி, விளையாட்டு, கலாசாரம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு பிரிவுத் தலைவர்

11. ஸைடி அப்துல் தாலிப் (பாஸ் – தாமான் டெம்பிளர்) – உள்கட்டமைப்பு, பொது வசதிகள் மற்றும் விவசாய அடிப்படையிலான தொழிற்சாலைகள் பிரிவுத் தலைவர்