Home இந்தியா நரேந்திர மோடியை சந்திக்கிறார் பேஸ்புக் நிறுவனர் மார்க்!

நரேந்திர மோடியை சந்திக்கிறார் பேஸ்புக் நிறுவனர் மார்க்!

528
0
SHARE
Ad

புதுடெல்லி, அக்டோபர் 1 – இந்தியாவில் வரும் அக்டோபர் 9 மற்றும் 10 -ம் தேதி நடைபெறவுள்ள மாபெரும் இணைய உச்சி மாநாட்டில் (Internet.Org) பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் கலந்து கொள்ளவுள்ளார்.

மேலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் மற்றும் சில அமைச்சர்களையும் மார்க் சந்தித்துப் பேசவுள்ளார் என்று பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

‘இண்டர்நெட்.ஆர்க்’ என்ற இந்த திட்டத்தின் மூலம் உலகிலுள்ள அனைவருக்கும் இணைய வசதியை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்று கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

சுமார் 5 பில்லியன் மக்கள் தங்களது திறன்பேசிகளில் இணைய வசதியை ஏற்படுத்தாமலேயே இணைய சேவையை அனுபவிக்க முடியும். இந்த திட்டத்திற்கு பேஸ்புக், எரிக்சன், மீடியா டெக், நோக்கியா, ஓபிரா, குவால்கோம் மற்றும் சாம்சுங் போன்ற நிறுவனங்கள் இணைந்து முன்னோடியாக செயல்படவுள்ளன.

இந்த திட்டம் குறித்து நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள மார்க், பேஸ்புக்கும், இந்திய அரசாங்கமும் எந்த வகையில் இணைந்து செயல்பட முடியும் என்பதை அறிந்து கொள்ளவுள்ளார்.

மைக்ரோசாப்ட் சத்ய நாதெல்லா மற்றும் அமேசேன் ஜெப்போசஸ், ஆகியோர் இந்தியா வருகை புரிந்த  நிலையில், அமெரிக்காவை மையமாக கொண்ட மூன்றாவது மிகப்பெரிய கார்பரேட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் சக்கர்பெர்க் இந்தியா செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.