Home இந்தியா ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

‘தூய்மை இந்தியா’ திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

610
0
SHARE
Ad

modi,புதுடெல்லி, அக்டோபர் 2 – மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். டெல்லி வால்மீகி பஸ்தி வீதியில் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார்.

காந்தி தங்கியிருந்த இல்லத்துக்கு வெளியே சாலையை சுத்தப்படுத்தி திட்டத்தை தொடங்கினார் மோடி. பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். முன்னதாக அங்கு வைக்கப்பட்டிருந்த காந்தியின் புகைப்படங்களை அவர் பார்வையிட்டார்.

‘தூய்மை இந்தியா’ திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படவுள்ளது. நாடு முழுவதும் உள்ள 4,041 நகரங்களில் மொத்தம் ரூ. 2 லட்சம் கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

#TamilSchoolmychoice

modiநகர் மற்றும் கிராமப்புறங்களில் ஒவ்வொரு குடியிருப்புக்கும் கழிவறை, சமுதாயப் பொது கழிவறை கட்டுவது, நகராட்சி திடக்கழிவு மேலாண்மையை சிறிய கிராமங்களிலும் செயல் படுத்துவது உள்ளிட்டவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

இத்திட்டம் தொடங்கப்படுவதை முன்னிட்டு அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.