கோலாலம்பூர், அக்டோபர் 15 – கெடா மாநிலத்தில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட கடுமையான சுழல் காற்றின் புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டு மலேசியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காரணம் மலேசியாவில் இது போன்ற சுழல்காற்று வீசுவதைப் பார்ப்பது அரிது.
நேற்று மாலை 4 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், பெண்டாங் மற்றும் கோல கெடா பகுதிகளில் சுமார் 15 வீடுகள் சேதமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், பெண்டாங், கம்போங் அலோர் பெசாரில் உள்ள பள்ளியின் மேற்கூரை சேதமடைந்து, அங்குள்ள கணினி அறையும் கடும் சேதமடைந்துள்ளது.
கெடா மாநிலம் பெடாங் பகுதியில் உள்ள ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் பகுதியிலும் சுழல் காற்று வீசியதாக முகநூலில் காணொளி பகிரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நட்பு ஊடகங்களில் பகிரப்பட்டுள்ள அந்த காணொளியை கீழே காணலாம்:-