Home கலை உலகம் பேஸ்புக்கில் ரஜினியை முந்திய கருணாநிதி!

பேஸ்புக்கில் ரஜினியை முந்திய கருணாநிதி!

526
0
SHARE
Ad

karunanithiசென்னை, அக்டோபர் 15 – பேஸ்புக்கில் நடிகர் ரஜினிகாந்தை விட தற்போது திமுக தலைவர் கருணாநிதிக்கு விருப்பங்கள் (லைக்குகள்) அதிகம் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

92 வயதாகி தனது தள்ளாத வயதிலும், சமூக வலைத்தளங்களில் மிகவும் சுருசுருப்பாக இருக்கிறார் கருணாநிதி. அரசியல் குறித்த தனது கருத்துகளையும், தான் பகிர்ந்து கொள்ளும் சில செய்திகளை பற்றியும் பேஸ்புக் மூலமாக மக்களுக்கு கருணாநிதி தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் இவரது கருத்து பதிவேற்றதை கண்காணிப்பதற்காகவே குழு ஒன்று அமைக்கப்பட்டதுடன், இவரின் தொண்டர்களும் கருத்துகளை பதிய வேண்டும் என்பதற்காக நவீன செல்பேசியை (ஸ்மாட்போன்) வாங்க தொடங்கியுள்ளனர்.

#TamilSchoolmychoice

தற்போது பேஸ்புக்கில் இவருக்கு 2 லட்சத்து 62 ஆயிரத்து 192 விருப்பங்களையும், டுவிட்டரில் 28 ஆயிரத்து 700 பாலோயர்களையும் கொண்டுள்ளார்.

மேலும் தினமும் பேஸ்புக் பக்கத்தில் உலவும் கருணாநிதி, திமுக பொருளாளர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், கனிமொழி, பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த், ப.சிதம்பரம் உள்ளிட்ட பிரபலங்களைப் பின்னுக்குத் தள்ளி முன்னணியில் உள்ளார் கருணாநிதி.