நாடு முழுவதும் மாணவர்களிடையே எழுச்சியுரை ஆற்றி, அவர்களின் மனங்களில் தன்னம்பிக்கை விதைகளைத் தூவியவர்.
எதிர்கால இந்தியா குறித்த நம்பிக்கையை அன்றே சாதாரண விஞ்ஞானியாக இருந்த காலத்திலேயே மக்களிடையே விதைத்தவர்.
இன்று செவ்வாய்க் கிரகத்தை நோக்கிய ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாக பல்வேறு விண்வெளி ஆராய்ச்சிகளை தன் வாழ்நாளில் செய்தவர்.
தமிழகத்திலுள்ள ராமேஸ்வரத்தில் கடந்த 1931 ஆம் ஆண்டு கலாம் பிறந்தார்.
அவரது நேர்மையும், உண்மையான உழைப்பும், அவரை நாட்டின் ஜனாதிபதியாக உயர்த்தியது.
இன்று 83வது பிறந்த நாளைக் கொண்டாடும் அப்துல் கலாமுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணுசக்தி துறையில் முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் பங்கு அபரிமிதமானது. அவரது தலைமையில் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்திய இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து ஒட்டுமொத்த உலகமும் அசந்து போனது.
அப்துல் கலாமுக்கு இன்று 83-வது பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அதில் கலாம் நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ இறைவன் அருள் புரிய வேண்டும் என்று மோடி கூறியிருக்கிறார்.