Home உலகம் நஜிப், ஆசிய – ஐரோப்பா உச்சநிலை சந்திப்புக் கூட்டத்திற்காக மிலான் சென்றார்!

நஜிப், ஆசிய – ஐரோப்பா உச்சநிலை சந்திப்புக் கூட்டத்திற்காக மிலான் சென்றார்!

600
0
SHARE
Ad

Najib Tun Razakமிலான், அக்டோபர் 15 – இத்தாலி நாட்டின் மிலான் நகரில் நடைபெறும் ஆசியா – ஐரோப்பா நாடுகளுக்கிடையிலான 10வது சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நஜிப் துன் ரசாக் இன்று இங்கு வந்து சேர்ந்துள்ளார்.

நஜிப்புடன் அவரது மனைவி டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் உடன் வந்துள்ளார். ஒரு சிறப்பு விமானத்தில் உள்நாட்டு நேரப்படி காலை 8.30 மணிக்கு அவர்கள் மிலான் நகரை வந்தடைந்தனர்.

பிரதமரையும் அவரது குழுவினரையும், இத்தாலிக்கான மலேசியத் தூதர் டத்தின் படுக்கா ஹாலிமா அப்துல்லாவும், தூதரக அதிகாரிகளும் வரவேற்றனர்.

#TamilSchoolmychoice

வியாழக்கிழமை தொடங்கும் இரண்டு நாள் உச்சநிலை மாநாடு “வளர்ச்சியையும் பாதுகாப்பையும் கொண்ட பொறுப்பான கூட்டமைப்பு” என்ற கருப்பொருளில் நடைபெறுகின்றது.

ஆசிய, ஐரோப்பா நாடுகளுக்கிடையே அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார அம்சங்களில் ஒத்துழைப்பையும், நட்புறவையும் இந்த மாநாடு விவாதிக்கும்.

ASEM எனப்படும் ஆசிய ஐரோப்பா கூட்டமைப்பு 1996ஆம் ஆண்டில் இரண்டு கண்டங்களிலும் உள்ள நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தைகளையும் ஒத்துழைப்பையும் வளர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது.

இந்த முறை சுமார் 53 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மாநாட்டில் இந்த முறை ஆசியான் நாடுகளுக்கான ஒருங்கிணைப்பாளராக மலேசியா செயல்படுகின்றது.

இந்த மாநாட்டில் முக்கிய உரையாற்றவிருக்கும் நஜிப், மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் மற்ற தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவார்.