Home நாடு ஜசெக புள்ளிகள் – சைரில் கிர் ஜொகாரி, டயானா சோஃபியா காதல் படங்கள் இணையத்தில் வெளியாகின!

ஜசெக புள்ளிகள் – சைரில் கிர் ஜொகாரி, டயானா சோஃபியா காதல் படங்கள் இணையத்தில் வெளியாகின!

660
0
SHARE
Ad

கோலாலம்பூர், அக்டோபர் 19 – பினாங்கு புக்கிட் பெண்டரா நாடாளுமன்ற உறுப்பினர் சைரில் கிர் ஜொகாரி – டயானா சோஃபியா இருவரும் முத்தமிட்டுக் கொள்வது போல் காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

Zairil Khir Johari

சைரில் கிர் ஜொகாரி

#TamilSchoolmychoice

அம்னோவில் முன்னாள் அமைச்சராக இருந்த கிர் ஜொகாரியின் புதல்வர் சைரில் கிர் ஜொகாரி ஜசெகவில் தீவிரமாக ஈடுபாடு காட்டி வந்தவர். கடந்த பொதுத் தேர்தலில் பினாங்கு மாநிலத்தில் உள்ள புக்கிட் பெண்டரா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

இதற்கு முன்பு அவர் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கின் செயலாளர்களில் ஒருவராகப் பணியாற்றியிருக்கின்றார்.

டயானா சோஃபியா சில மாதங்களுக்கு முன்னால் நடந்த தெலுக் இந்தான் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் ஜசெகவால் களமிறக்கப்பட்டவர். திருமணம் ஆகாதவர். தெலுக் இந்தான் இடைத் தேர்தல் காலத்தில் டயானாவின் அழகிய தோற்றம் வெகுவாகப் பேசப்பட்டது. இருப்பினும் அவர் கெராக்கான் தேசியத் தலைவர் டத்தோ மா சியூ கியோங்கிடம் தோல்வி கண்டார்.

Dyna Sofiya

டயானா சோஃபியா…

டயானாவுடனான தனது புகைப்படங்கள் வெளியானது கீழ்த்தரமான சாக்கடை அரசியல் என சைரில் சாடியுள்ளார்.

32 வயதான சைரில், டயானா சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் சைரிலின் புகைப்படத்துடன் கூடிய முகநூல் (பேஸ் புக்) பக்கம் மூலம் வெளியிடப்பட்டிருக்கின்றது. ஆனால் அது அவரது உண்மையான முகநூல் பக்கம்தானா அல்லது வேறு யாராவது சட்டபூர்வமற்ற முறையில் அந்தப் பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றனரா என்பது இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

“மேலும் இதைப் பற்றிப் பேசி இந்த விவகாரத்திற்கு மரியாதை ஏற்படுத்த நான் விரும்பவில்லை” என சைரில் கூறியிருக்கின்றார்.

இதே விவகாரம் குறித்து கருத்துரைத்த டயானா சோஃபியா எதிர்க்கட்சிகளுக்கு எதிராக இதுபோன்ற கீழ்த்தரமான வெறுப்பு தரக் கூடிய அரசியல் பயன்படுத்தப்படுவதாக கண்டனம் தெரிவித்திருக்கின்றார்.

“நான் ஒரு பெண்ணாக இருப்பதால், வெகு சுலபமாக என்னைக் குறிவைத்துள்ளனர். நான் இது குறித்து மிகவும் ஆத்திரப்படுகின்றேன்” என்றும் டயானா கூறியுள்ளார்.

தனக்கு எதிராக இத்தகைய தாக்குதல் தொடுத்தவர்களோடு வாக்குவாதம் செய்வதையோ, கருத்து சொல்வதையோ தான் தவிர்க்கப் போவதாகவும் டயானா தெரிவித்துள்ளார்.

இன்று காலை முதல் இணையத்தில் வெளியான இந்தப் புகைப்படங்கள் குறுகிய நேரத்தில் நட்பு ஊடகங்கள் வழியாகவும், மற்ற இணையப் பரிமாற்றங்கள் மூலமாகவும் சுழல் முறையில் வெகு துரிதமாகப் பரவத் தொடங்கியுள்ளன.

இந்தப் புகைப்படங்கள் இட்டுக் கட்டியவை என்றும் டயானா பழி சுமத்தியுள்ளார். இதுபோன்ற இட்டுக் கட்டிய புகைப்படங்கள் வெளியாவது இது முதல் முறையல்ல என்றும் இனியும் தொடரும் என தான் எதிர்பார்ப்பதாகவும் டயானா கூறியுள்ளார்.