Home நாடு தீபாவளிக்கு ‘மோடி ஜிப்பா’ மிகவும் பிரபலம்!

தீபாவளிக்கு ‘மோடி ஜிப்பா’ மிகவும் பிரபலம்!

650
0
SHARE
Ad

modinwe_07082014கிள்ளான், அக்டோபர் 20 – தனது மிடுக்கான உடையால் அனைவரையும் பெரிதும் கவர்ந்து வருபவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. அவர் அணியும் பைஜாமா ஜிப்பாவுக்கு என்று ஒரு தனி மவுசு வந்துவிட்டது.

அந்த மவுசு இந்தியாவில் மட்டுமல்ல மலேசியாவில் அதிக அளவில் பரவியிருக்கிறது என்றால் நம்புவீர்களா?

ஆம்… மோடியின் உடை மீது கொண்ட ஈர்ப்பால், இந்த வருடம் தீபாவளிக்கு பெரும்பாலான குழந்தைகளும், இளைஞர்களும் மோடி அணிந்திருப்பதைப் போன்ற ஆடைகளையே தேர்ந்தெடுத்து வாங்குகின்றனர்.

#TamilSchoolmychoice

இது குறித்து, கிள்ளான் லிட்டில் இந்தியாவில், பிரபல ஸ்ரீ குமரன் ஆடை விற்பனைக் கடையின் நிர்வாகி என்.மோகன் பெர்னாமாவிடம் கூறுகையில், மோடி அணிந்திருப்பதைப் போன்று ஜிப்பா, அதன் மேல் ஒரு அணியும் ஒரு மேலாடை, சற்று பிடிப்பான பைஜாமா இது தான் இந்த வருடம் தீபாவளிக்கு இளைஞர்களின் தேர்வாக இருக்கின்றது. ஆடை அணிவதில் மோடி ஒரு தனி பாணியையே உருவாக்கிவிட்டார்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அது போன்ற ஆடைகளை தங்களது பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் பெற்றோர் அந்த உடையில் அவர்களை அழகாக படம் பிடித்துப் பார்க்கவும் விரும்புகின்றனர் என்றும் மோகன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஒன்று முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கென தயாரிக்கப்பட்ட நீலம், பச்சை என பல வண்ணங்களில் வரும் விதவிதமான ஜிப்பாக்கள் அதிகம் விற்பனையாவதாக, கடந்த 23 வருடங்களாக ஆடை விற்பனைத் தொழிலில் ஈடுபட்டு வரும் மோகன் தெரிவித்துள்ளார்.

“மோடி அணியும் இந்த உடைகள், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அணிந்திருந்த உடைகளை ஒத்து உள்ளது. அந்த உடை அவருக்கு மேலும் மரியாதையைத் தருகின்றது” என்று மோகன் குறிப்பிட்டுள்ளார்.