Home உலகம் தெற்காசியாவின் அமைதி காஷ்மீர் பிரச்சனையின் தீர்வில் உள்ளது – பாகிஸ்தான் இராணுவத் தளபதி ரஹீல் ஷெரீப்! 

தெற்காசியாவின் அமைதி காஷ்மீர் பிரச்சனையின் தீர்வில் உள்ளது – பாகிஸ்தான் இராணுவத் தளபதி ரஹீல் ஷெரீப்! 

498
0
SHARE
Ad

PAKISHTHANஇஸ்லாமாபாத், அக்டோபர் 21 – இந்தியா-பாகிஸ்தானிடையே நிலவும் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டால்தான், தெற்காசிய வட்டாரத்தில் அமைதியான சூழல் ஏற்படும் என்று பாகிஸ்தான் இராணுவத் தளபதி ரஹீல் ஷெரீப் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:- “ஐ.நா.சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின் அடிப்படையில், காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் தீர்வு காண்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.”

“தெற்காசிய வட்டாரத்தின் நிலைப்புத்தன்மை, சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை சார்ந்த உறவுகள் நிலைப்பெற வேண்டுமானால் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.”

#TamilSchoolmychoice

“அண்டை நாடுகளில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறன் பாகிஸ்தான் இராணுவத்துக்கு உள்ளது. பாகிஸ்தானை ஆக்கிர மிக்க நினைத்தால், தகுந்த பதிலடியை கொடுத்தே தீருவோம்.”

“வஜிரிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் வெற்றிகரமாக நடந்து வருகின்றது. தீவிரவாதத்தை முற்றிலும் அகற்றும் வரை ஓயமாட்டோம். நாட்டில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே இராணுவத்தின் குறிக்கோள்”.

“வஜிரிஸ்தானை மையப்படுத்தி தீவிரவாதிகள் ஏற்படுத்தியிருந்த கட்டமைப்புகளை அழித்துவிட்டோம். இனி அங்கு விரைவில் அமைதி திரும்பு. அதனையே பாகிஸ்தான் அரசும் விரும்புகின்றது” என்று அவர் கூறியுள்ளார்.