Home நாடு அலோர்ஸ்டாரில் சூறாவளி சுழல் காற்றில் சிக்கி 10 வீடுகள் சேதம்

அலோர்ஸ்டாரில் சூறாவளி சுழல் காற்றில் சிக்கி 10 வீடுகள் சேதம்

655
0
SHARE
Ad

அலோர்ஸ்டார், நவம்பர் 1 – கெடா மாநிலம், அலோர் ஸ்டார் பகுதியில் வெள்ளிக்கிழமை வீசிய திடீர் சூறாவளி சுழல் காற்றில் சிக்கி 10 வீடுகள் சேதமடைந்தன.

இந்தச் சூறாவளி சுழல் காற்று 2 இடங்களை தாக்கியது. வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு தாமான் இனாங் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை சூறாவளிக் காற்று மிகுந்த வேகத்துடன் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Twister in Kedah Alor Setar 31 Oct 2014

#TamilSchoolmychoice

 முகநூல் பக்கங்களில் வெளியிடப்பட்டு உலா வந்து கொண்டிருக்கும் கெடா, சுழல் காற்று காட்சிகளில் ஒன்று

இச்சமயம் ஒரு மரம் வேரோடு பெயர்த்தெடுக்கப்பட்ட காட்சி சமூக வலைத் தளங்களில் வெளியானது. சுல்தான் அப்துல் ஹலீம் விமான நிலையம் அருகே சிறிய சூறாவளி சுழல் காற்று தென்பட்டதாகவும் சிலர் தெரிவித்தனர்.

குனுங் கெரியாங்கில் உருவான சூறாவளி சுழல் காற்று பின்னர் அலோர் ஸ்டார் வரை நகர்ந்து வந்து தாக்கியதாகத் தெரிகிறது. கெடா மாநிலத்தை இரண்டாவது முறையாக இத்தகைய சூறாவளி சுழல் காற்று தாக்கியுள்ளது.

முன்னதாக இம்மாதத் துவக்கத்தில் கம்போங் அலோர் பெசார் பகுதியை தாக்கிய சூறாவளி சுழல் காற்றால் சில வீடுகளும் ஒரு பள்ளியும் சேதமடைந்தன. இம்முறை சுழல் காற்று தாக்கியதில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை.