Home தொழில் நுட்பம் சட்ட திட்டங்களுக்கு உடன்பட்டால் பேஸ்புக் தடை நீக்கப்படும் – சீனா!

சட்ட திட்டங்களுக்கு உடன்பட்டால் பேஸ்புக் தடை நீக்கப்படும் – சீனா!

495
0
SHARE
Ad

facebookபெய்ஜிங், நவம்பர் 5 – சீனாவின் சட்ட திட்டங்களுக்கு ‘பேஸ்புக்’ (Face book) உடன்பட்டால், சீனாவில் பேஸ்புக்கிற்கு இருக்கும் தடை நீக்கப்படும் என சீன அரசு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நட்பு ஊடகமான பேஸ்புக்கை, சீன மக்கள் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் பேஸ்புக் இணையதளம் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

சீன அரசின் தணிக்கைக் குழுவின் பரிந்துரைப்படி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவின் தேசிய இணைய கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் பேஸ்புக் தடை பற்றி கூறுகையில்,

#TamilSchoolmychoice

“பேஸ்புக்  உட்பட சில சமூக ஊடகங்கள் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சீனாவில் எந்தவொரு சமூக ஊடகங்களும் இடம்பெற முடியாது என்று கருத வேண்டாம். சீன அரசின் சட்ட திட்டங்களுக்கு உடன்பட்டால், தடை நீக்குவதற்கு சீன அரசு தயாராக உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன் ஜிஜியாங் மாகாணத்தில் நடைபெற்ற அனைத்துலக இணைய மாநாட்டில் கலந்து கொண்ட சீனாவின் இணைய தகவல் அலுவலகத்தின் தலைவர் லியு வெய், சீனாவில் இணையம் தொடர்பான கட்டுபாடுகள் பற்றி கூறுகையில்,

“சீனாவில் நடைமுறையில் உள்ள இணைய கட்டுப்பாடுகளை மேலும் வரையறுத்து, வலுபெறச் செய்ய திட்டமிட்டுள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.

பேஸ்புக், டுவிட்டர் மட்டுமல்லாது, சீனாவின் அதிகார வர்க்கத்தை விமர்சிக்கும் அத்தனை ஊடகங்களையும் சீன அரசு கட்டுப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதனை மெய்பிக்கும் வகையில் சமீபத்தில் நடைபெற்ற ஹாங்காங் போராட்டத்தை முன்னிலைப்படுத்தி செய்தி வெளியிட்ட பிபிசி இணையத்தளத்தை முற்றிலும் சீனா அரசு தங்கள் நாட்டில் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.